மூளையில் அதிக செல்கள் இருந்தால்... - எச்சரிக்கும் இங்கிலாந்து பல்கலைக்கழகம் | Bigger Brains Linked To Higher Cancer Risk: Study

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (31/10/2018)

கடைசி தொடர்பு:17:20 (31/10/2018)

மூளையில் அதிக செல்கள் இருந்தால்... - எச்சரிக்கும் இங்கிலாந்து பல்கலைக்கழகம்

`மூளையின் அளவு பெரிதாக இருந்தால் மூளைப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்’ என்று லண்டனைச் சேர்ந்த நார்வேஜியன் அறிவியல் தொழிநுட்ப பல்கலைக்கழகம் (Norwegian University of Science and Technology) ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

  மூளைப் புற்றுநோய் - பல்கலைக்கழகம்

மூளைப்புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறித்து இந்தப் பல்கலைக்கழகம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. 124 நோயாளிகளின் மூளைப் புற்றுநோய் கட்டிகளை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் நரம்பு மற்றும் புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 'அதிக செல்கள் இருக்கும் மூளையில், செல்களின் பிரிவுகளும் அடுக்குகளும் அதிகமாக இருக்கும். அதனால் புற்றுநோய்க்கு அடிப்படைக் காரணமான மியூட்டேசன் (Mutation) என்னும் செல்பிறழ்வு ஏற்பட்டு புற்றுநோய் வாய்ப்பு அதிகரிக்கும்' என்று இந்த ஆய்வில் கண்டறிந்தனர். அதன்படி, மூளையின் அளவு பெரிதாக இருந்தால், அவர்களுக்குப் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்' என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

மூளை

``புற்றுநோய் உடலில் நகம், முடியைத் தவிர எங்கு வேண்டுமானாலும் வரலாம். மரபு, வாழும் சூழல், நாம் சாப்பிடும் உணவு எனப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதோடு, 'இதனால்தான் புற்றுநோய் வந்தது' என அறுதியிட்டுக் கூற முடியாத காரணங்களும் இருக்கின்றன. அதனால், மூளைச் செல்கள் அதிகம் இருக்கின்றன என்பதாலேயே புற்றுநோய் வந்துவிடும் என்று அச்சப்படத் தேவையில்லை. ஒருவருக்கு மரபிலேயே புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது, மூளைச்செல்களும் அதிகம் இருந்தால் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார்கள் புற்றுநோய் மருத்துவர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க