`திருமணத்தைத் தள்ளிப்போடாதீர்கள் ஆண்களே!' - எச்சரிக்கும் ஆய்வு முடிவு | Disadvantages of late marriage for men

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (02/11/2018)

கடைசி தொடர்பு:19:40 (02/11/2018)

`திருமணத்தைத் தள்ளிப்போடாதீர்கள் ஆண்களே!' - எச்சரிக்கும் ஆய்வு முடிவு

`பேச்சுலர் லைஃப்' தான் தொல்லையே இல்ல... என்று சொல்லிச் சொல்லி திருமணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வரும் ஆண்கள் சற்று கவனிக்க வேண்டிய விஷயம் இது. தாமதித்து குழந்தைப் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்பது நாம் அறிந்ததே. ஆனால், தாமதித்து திருமணம் செய்யும் ஆண்களாலும் பிறக்கும் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

திருமணம்

 நவ நாகரிக உலகத்தில் தாமதித்து திருமணம் செய்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 45 வயதுக்குமேல் உள்ள ஆண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிஸம் போன்ற மரபணுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வயதான கணவர்களால், கர்ப்பிணி மனைவிகள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படலாம் என்றும் அதில் தெரிய வந்துள்ளது. திருமணம் தாமதிப்பதால் ஆண்களின் இனப்பெருக்க செல்களில் பாதிப்பு ஏற்படுவதைப் போன்று மரபணுக்களிலும் பாதிப்பு ஏற்படும். அந்த மரபணுக்கள் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மனநலத்தைப் பாதிக்கிறது. 50 வயதுக்கும் மேல் திருமணம் செய்தால், பாதிப்புகளின் தாக்கம் அதிகரிக்கும். ஆண்கள், 45 வயதுக்கு முன்பாக திருமணம் செய்து, குழந்தை பெற்றுவிட்டால் இந்தப் பாதிப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.  

பெண்களிடம் திருமணத்தைத் தள்ளிப்போடாதே, குழந்தையைத் தள்ளிப்போடாதே என்று அறிவுரைகளை வாரி வழங்கும் குடும்பத்துப் பெரியவர்கள், அதே அறிவுரையை ஆண்களுக்கும் கட்டாயம் கொடுங்கள்!