சென்னை கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடக்கம்! | Human milk bank opened in Kasturba Gandhi Government Hospital chennai

வெளியிடப்பட்ட நேரம்: 18:16 (08/11/2018)

கடைசி தொடர்பு:18:16 (08/11/2018)

சென்னை கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடக்கம்!

ஒரு மனிதனின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு அஸ்திவாரமே தாய்ப்பால்தான்.

சென்னை கஸ்தூரி பாய் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம், தாய் சேய் நல மையம், தாய்ப்பால் வங்கி எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கிவைத்தார். 

விஜயபாஸ்கர்

ஒரு மனிதனின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு அஸ்திவாரமே தாய்ப்பால்தான். பிறந்த குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாகத் தாய்ப்பால் கொடுத்தாலே, உலக அளவில் ஆண்டுக்கு 8.2 லட்சம் குழந்தைகளின் இறப்பைத் தடுத்துவிடலாம்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், தாய்ப்பால் கிடைக்காமல் இன்று ஏராளமான குழந்தைகள் தவித்து வருகிறார்கள் . தாய்மார்களுக்குப் பால் சுரக்காமல் போவதே அதற்குக் காரணம். அதேபோல, மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் காணாமல் போவதும் தொடர்கதையாக இருக்கிறது.

இவ்விரண்டு பிரச்னைகளையும் சரிசெய்யும்விதமாகத் தாய்ப்பால் வங்கி மற்றும் தாய் மற்றும் குழந்தையின் கைகளில் ரேடியோ அதிர்வெண் அடையாளக்காப்பு (Radio frequency identification) அணியும் திட்டம் ஆகியவற்றைத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கிவைத்தார். அதோடு தாய் சேய் விழிப்பு உணர்வு நலப் பூங்கா, ஆண் மற்றும் பெண் பார்வையாளர் தங்கும் அறை ஆகியவற்றையும் பார்வையிட்டார். 

அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது,

`` சென்னை, தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட 12 இடங்களில் இதுவரை தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. 15 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இந்த ஆண்டு தாய்ப்பால் வங்கித் திட்டம் விரிவுபடுத்தவுள்ளது. இதுவரை 14,530 தாய்மார்கள் தாய்ப்பால் தானம் வழங்கியுள்ளனர். 12,316 குழந்தைகளுக்கு அவை தானமாக அளிக்கப்பட்டுள்ளன’’ என்றார் அவர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க