வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (09/11/2018)

கடைசி தொடர்பு:17:32 (09/11/2018)

ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன் இதைக் கவனிக்கத் தவறாதீர்கள்! #WorldAntibioticAwarenessWeek

லகம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் உள்ளன. இந்த நுண்ணுயிர்களால் நன்மைகள் பல இருந்தாலும், பல்வேறு வகையில் மனிதர்களின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்று பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களைத் தடுக்க பல்வேறு ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் உள்ளன. ஆன்டிபயாட்டிக்குக்கு `ஆன்டிபாக்டீரியல்’ என்று ஒரு பெயரும் உண்டு. உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கும். 

ஆன்டிபயாட்டிக்

நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு உண்டாகும் பாதிப்பு, தடுப்புநிலைகளைப் (Antibiotic Resistence) பற்றியும், சிறந்த மருத்துவப் பழக்கங்களைப் பற்றியும் மக்களிடையே விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புஉணர்வு வாரம் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை கொண்டாடப்படுகின்றது. 

ஆன்டிபயாட்டிக்

முறையற்ற ஆன்டிபயாடிக் பயன்பாடானது எதிர் நுண்ணுயிர் மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மையை உண்டாக்கும். அதனால் மருந்துகளின் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளுக்கு எதிரான திறனான செயல் தடைபடும். 64 சதவிகித மக்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஃப்ளூ காய்ச்சல், சளி போன்றவற்றைக் குணப்படுத்தும் என நம்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர்’என `உலகச் சுகாதார நிறுவனம்'  நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆன்டிபயாட்டிக்

ஆன்டிபயாட்டிக் மருந்துகளைத் தேவையற்ற நேரத்தில் உட்கொள்வதாலும், அதிக அளவு இந்த மருந்தைச் சாப்பிடுவதாலும் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியா இந்த வகையான மருந்துக்கு எதிராகச் செயல்படும் தன்மையைப் பெற்றுவிடும். அதாவது, அந்த மருந்தை எதிர்த்து வாழப் பழகிக்கொள்ளும். இதனால், மருந்து எடுத்தும் பலன் இல்லாத நிலை ஏற்படும். நோய்களின் வீரியம் அதிகரித்து, உடல்நலம் குன்றிவிடும். எனவே, ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன் தகுதி பெற்ற தொழிற் வல்லுநர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது. 

 

 

டாக்டர் அட்வைஸ் இல்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்தை எடுத்துக் கொண்டதன் விளைவாக, ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா? கீழேயுள்ள லின்கை க்ளிக் செய்யவும்.

டாக்டர் பரிந்துரையின்றி மாத்திரை எடுக்கிறீர்களா? - ஓர் உஷார் ரிப்போர்ட்!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க