வேலப்பன்சாவடியில் 250 படுக்கைகளுடன் புதிய மருத்துவமனை தொடக்கம்! | New Hospital inaugurated in velapanchavadi

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (11/11/2018)

கடைசி தொடர்பு:15:45 (11/11/2018)

வேலப்பன்சாவடியில் 250 படுக்கைகளுடன் புதிய மருத்துவமனை தொடக்கம்!

மருத்துவத் துறையில் 85 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட டாக்டர் மேத்தாஸ் மருத்துவமனையின் 250 படுக்கைகள் கொண்ட, உலகளாவிய வசதிகள் அடங்கிய புதிய மருத்துவமனை சென்னை, வேலப்பன்சாவடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) தொடங்கப்பட்டது.

மருத்துவமனை

1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகக் கட்டப்பட்டு வரும் இதில், முதல்கட்டமாக 250 படுக்கைகள் கொண்ட சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.  குழந்தைகள் நலம், பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு என குழந்தைகள் சிகிச்சை தொடர்பான பல்வேறு சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் இங்கு உள்ளன. மேலும் குழந்தைகள் மேம்பாடு மையம், சிகிச்சைப் பெறும் குழந்தைகளுக்கான விளையாட்டு அறை போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திறப்புவிழா

மருத்துவமனையின் திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய சமீர் மேத்தா, "ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து வளரிளம் பருவம் வரை, அதற்குத் தேவையான சிகிச்சைகள், ஆலோசனைகள் என ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படும். நோய் வந்தபிறகு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நீண்ட ஆயுளுக்குத் தேவைப்படும் மருத்துவ உதவியை அளிக்கவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய கொள்கைகள்" என்றார்.

திறப்புவிழா

தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கெவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன், நடிகைகள் அனுஹாசன், தேவயானி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


[X] Close

[X] Close