மக்கள் உட்கொள்ளும் உணவின் அளவு 129% அதிகரிப்பு! - ஆய்வில் தகவல் | Amount of food consumed increased by 129 percentage

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (12/11/2018)

கடைசி தொடர்பு:17:00 (12/11/2018)

மக்கள் உட்கொள்ளும் உணவின் அளவு 129% அதிகரிப்பு! - ஆய்வில் தகவல்

மக்கள் உட்கொள்ளும் உணவின் அளவு 129% அதிகரிப்பு! - ஆய்வில் தகவல்

டந்த 40 ஆண்டுகளில் மனிதர்கள் சாப்பிடும் உணவின் அளவு 129 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உணவின் அளவு

நார்வே நாட்டின் நார்வேஜியன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 1975-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 186 நாடுகளில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதன்படி, 1975-ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் உள்ள பெரியவர்கள் ஒருநாளைக்கு 2,465 கிலோ கலோரிகள் கொண்ட உணவைச் சாப்பிட்டுள்ளனர். 2014-ம் ஆண்டு அதன் அளவு 2,615 கிலோ கலோரிகளாக அதிகரித்துள்ளது. அதன்படி, உலக அளவில் உணவை உட்கொள்ளும் அளவு 129 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உணவுமுறையில் மாற்றம், சராசரி உடல் எடை மற்றும் உயரம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால், நாம் உண்ணும் சாப்பாட்டின் அளவு எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்குமாம். தற்போது உலகத்தின் மொத்த மக்கள் தொகை 760 கோடியாக உள்ளது. 2050-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 900 கோடியை எட்டும். அந்தச் சமயத்தில் 900 கோடி மக்களுக்கும் தேவையான உணவு கிடைப்பதிலும் சிரமம் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


[X] Close

[X] Close