வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (14/11/2018)

கடைசி தொடர்பு:20:00 (14/11/2018)

புற்றுநோய் பாதித்த தாய்க்கு மருத்துவம் செய்ய பணமில்லை - சுயமாக மருந்து தயாரித்த மகன்!

தலைவலி, காய்ச்சல் போன்ற சாதாரண உடல்நலக் கோளாறுகளில் தொடங்கி புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய் வரை அனைத்துக்கும் சுயமருத்துவத்தையே அவர்கள் நாடுகின்றனர்.

உலக அளவில் சீனாவில் மக்கள் தொகை அதிகம். அதேபோல அங்கு சர்க்கரைநோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பொருளாதாரத் தேவையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஏழை எளிய மக்களால், போதுமான சிகிச்சை பெறமுடியாத சூழல் காணப்படுகிறது. அரசாங்கமும் எவ்வளவோ முயன்றும் இந்தப் பிரச்னையை முற்றிலும் தீர்க்க முடியாமல் திணறி வருகிறது. எனவே, ஏழை எளிய மக்களில் பலர் சுயமருத்துவத்தை நாடுகின்றனர். தலைவலி, காய்ச்சல் போன்ற சாதாரண உடல்நலக் கோளாறுகளில் தொடங்கி புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய் வரை அனைத்துக்கும் சுயமருத்துவத்தையே அவர்கள் நாடுகின்றனர். இன்னும் சிலர், மருத்துவமனையில் கொடுக்கப்படும் மருந்துகளைத் தாமாகவே தயாரித்துக் கொள்கின்றனர்.

புற்றுநோய்

சீனாவைச் சேர்ந்த சாங்க் சீஜன் (Zhang Zhejun) என்பவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் தாய் `யோ'வுக்கு சிகிச்சை செய்ய முடிவெடுத்தார். ஆனால், மருத்துவம் செய்ய அவரிடம் போதிய பணவசதி இல்லாததால், வீட்டிலேயே சுயமாக மருந்துகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளார். ஒரு வெள்ளி தகட்டின் மீது, மருந்துப் பொருளை வைத்து எலெக்ட்ரானிக் ஸ்கேல் மூலம் அதன் அளவைக் கண்காணித்து மருந்து தயாரித்துள்ளார் சாங்க். அதாவது, பிளாஸ்டிக் ஸ்ட்ரா உதவியுடன் அவர் மருந்துப்பொருள்களைக் கையாண்டுள்ளார். அவருக்கு போதிய மருத்துவ அறிவு கிடையாது என்றாலும், தாமாக மருந்துகளைத் தயாரித்தால், விளைவு என்னமாதிரியாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்ட பிறகே சாங்க் இப்படியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 

சாங்க், தான் தயாரித்த மருந்துகளை மருத்துவ ஆய்வு மற்றும் தரக் கட்டுப்பாட்டு சோதனைகள் என எதற்கும் அனுப்பவில்லை. இன்டெர்நெட் உதவியுடன் புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பது என்பதைத் தேடிப்பார்த்து அதில் சொல்லப்படும் செய்முறை விளக்கங்களை அடிப்படையாகக்கொண்டு மருந்து தயாரித்துள்ளார். மருந்து தயாரிக்கத் தேவையான பொருள்களையும், இணையத்திலேயே ஆர்டர் செய்திருக்கிறார். தயாரித்த மருந்துகள் வேலை செய்யாமல் போனால், அடுத்து வேறு மருந்துகள் தயாரிப்பது எனத் தொடர்ச்சியாகப் பல மருந்துகளைத் தயாரித்து தாய்க்குக் கொடுத்துள்ளார் சாங்க். 

புற்றுநோய் தயாரித்த சாங்க் சீஜன்

சாங்க்கின் தாயாருக்கு, மிகத்தீவிரமான சக்தி கொண்ட மருந்துகளின் தேவை இருக்கிறது என முந்தைய சிகிச்சையின்போது மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதை அடிப்படையாகக் கொண்டு, மருந்தின் அளவுகளைத் தாமாகவே கணித்து அவற்றைத் தயார்செய்து கொடுத்துள்ளார். இரண்டு ஆண்டுகள் இம்மருந்துகளை உட்கொண்ட, சாங்கின் தாயார் கடைசியில் இறந்துவிட்டார். இதையடுத்து அவரின் தாயாருக்கு மருத்துவ உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டது. அதில் இரைப்பை, குடல் மற்றும் மூச்சுக்குழாய் பகுதிகளில் கடுமையாக அழற்சி ஏற்பட்டு அதன்காரணமாக அவரின் தாயார் இறந்ததாகக் கூறியுள்ளனர். ஆனால், சாங்க் இப்போதும், 'தாயின் இறப்புக்குத் தனது மருந்துகள் காரணமாக இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை' என்றே நம்புகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க