‘ஸ்ட்ரெஸ்ஸா எனக்கா?’ - வெடித்துச் சிரிக்கும் வெற்றிமாறன் | Secret Behind Director Vetrimaran

வெளியிடப்பட்ட நேரம்: 14:18 (16/11/2018)

கடைசி தொடர்பு:15:32 (16/11/2018)

‘ஸ்ட்ரெஸ்ஸா எனக்கா?’ - வெடித்துச் சிரிக்கும் வெற்றிமாறன்

மிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை ஆகிய நான்கு திரைப்படங்களும் ரசிகர்களிடமும், சினிமா வட்டாரத்திலும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்றவர். ஷூட்டிங் ஸ்பாட்டில்  மிகவும் பரபரப்பாகவும், அர்ப்பணிப்போடும் இருப்பவர் எனப் பெயரெடுத்தவர். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்தின் ஒருசில காட்சிகளுக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. மிகவும் சாதுர்யமாக அந்த நெருக்கடியைக் கையாண்டார் அவர்.

வெற்றிமாறன்

இதேபோன்று அவரின் வாழ்வில் மிகவும் இக்கட்டான, மன அழுத்தத்தை உண்டாக்கிய தருணங்களை எப்படிக் கையாள்கிறார், ஏதேனும் சிறப்புப் பயிற்சிகள் எடுத்துக் கொள்கிறாரா என அவரிடம் கேட்டோம்,

வெற்றிமாறன்

இந்தக் கேள்வியைக் கேட்டதுமே வெடித்துச் சிரித்தவர் ``என்னால மத்தவங்களுக்குத்தான் ஸ்ட்ரெஸ் வரும் எனக்கு வராது. அப்படியே வந்தாலும் எந்த விஷயத்தால ஸ்ட்ரெஸ் ஏற்படுதோ அதைப் பத்தி யோசிக்கிறத உடனே நிறுத்திடுவேன். ஒரு வேலையால ஸ்ட்ரெஸ்ன்னா அந்த வேலையை அப்படியே ஸ்டாப் பண்ணிட்டு அமைதியா இருந்துடுவேன். ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட்க்காக தனியாலாம் ஏதும் செய்றது இல்லை. ``என்றார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close