வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (17/11/2018)

கடைசி தொடர்பு:19:41 (17/11/2018)

சென்னையில் மண் குளியல், சூரியக் குளியல்... முன்பதிவுக்கு முந்துங்க!

சென்னையில் மண் குளியல், சூரியக் குளியல்... முன்பதிவுக்கு முந்துங்க!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, புனேயில் உள்ள தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் சார்பில் முதல் தேசிய இயற்கை மருத்துவ தினம் நாளை (18.11.18) கொண்டாடப்படுகிறது. 

மண் குளியல்

நாளை முதல் வரும் 24-ந்தேதி வரை (7 நாள்கள்) நடைபெறும் இந்த விழாவில் நாளை (18-ந்தேதி) பஞ்சபூதங்களில் ஒன்றாகக் கருதப்படும் சூரியனின் முக்கியத்துவம் பற்றி சொற்பொழிவுகள் நடக்கின்றன. சூரியக் குளியல், வாழையிலைக் குளியல் உள்ளிட்ட சூரியச் சிகிச்சைகளும் அளிக்கப்படும். 19-ந்தேதி இயற்கை மூலிகை உணவு, 20-ந்தேதி மண் குளியல், 21-ந்தேதி நிற சிகிச்சை, 22-ந்தேதி நீர் சிகிச்சை, 23-ந்தேதி அக்குபஞ்சர், 24-ந்தேதி மசாஜ் தெரபி பற்றிய மருத்துவச் சொற்பொழிவுகள், மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற உள்ளன. சூரியக்குளியல், மண் குளியல், பெருங்குடல் நீர் சிகிச்சை போன்ற முக்கிய சிகிச்சைகளுக்கு முன்பதிவு செய்ய 044 26222516 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

7 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் சிறப்பம்சம் குறித்து அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி துணை பேராசிரியர் ஒய்.தீபா விளக்கமாகக் கூறினார்.

``இயற்கை மருத்துவத்தின் மகத்துவம் பற்றி மக்களுக்கு இன்னும் தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ளவே இந்த 7 நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக நம் உடலில் எண்டோர்பின், டோபமைன், செரடோனின் மற்றும் ஆக்சிடோசின் போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. அக்குபங்சர், மசாஜ் தெரபி, சிரிப்பு சிகிச்சை, யோகா மற்றும் காற்று சிகிச்சை போன்றவற்றைச் செய்வதன்மூலம் எண்டோர்பின் ஹார்மோன் சுரக்கும். இதன்மூலம் நாம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கமுடியும்.

வாழ்க்கையில் நாம் பிரச்னைகளை எதிர்கொள்ளவும் மன அமைதி பெறவும் டோபமைன் ஹார்மோன் தேவை. இதற்கு மூச்சுப்பயிற்சி, தியானம் செய்ய வேண்டியது அவசியம். மேலும், தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் நீர் அருந்தி வந்தால் டோபமைன் ஹார்மோனை சரியான அளவில் பராமரிக்கலாம். நேர்மறைச் சிந்தனையுடன் செயல்படவும் இந்த ஹார்மோன் உதவும். 

இயற்கை

அடுத்தது செரடோனின் ஹார்மோன். இது மன அழுத்தம் போக்கவும், மூளையை வலிமைப்படுத்தவும், 'மூட் ஸ்விங்க்ஸ்' ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவும். செரடோனின் சுரப்பது குறைந்தால் உடல் சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். சூரியச் சிகிச்சை, வாழையிலைக் குளியல், மண் குளியல், எண்ணெய்க் குளியல், சூரிய நமஸ்காரம் மற்றும் நிற சிகிச்சை போன்றவை செரடோனின் ஹார்மோன் சுரக்க உதவும். வாழையிலைக் குளியல் சிகிச்சை செய்ய முன்பதிவு செய்ய வேண்டும்.

இன்றைக்குப் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும்கூட மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அதற்கு ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரப்பதே காரணமாகும். ஆக்சிடோசின் உறவுகளை மேம்படுத்த உதவும். குறிப்பாகத் தாம்பத்திய உறவு நல்லமுறையில் இருக்க இந்த ஹார்மோன் உதவும். சிரிப்பு சிகிச்சை, மியூசிக் தெரபி மற்றும் தியானம் செய்வதன்மூலம் ஆக்சிடோனின் சுரக்கும். 

இயற்கை

நிற சிகிச்சை, காந்த சிகிச்சை செய்வதால் உடல், மனம் மற்றும் ஆன்மாவை அமைதிப்படுத்தலாம். நோய்கள் வராமல் பாதுகாக்க  நீர் சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம். இதில் பெருங்குடல் நீர் சிகிச்சையும் ஓர் அங்கமாகும். 7 நாள் விழாவின்போது செய்யப்படும் பெருங்குடல் நீர் சிகிச்சைக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

நமக்குத் தேவையான சக்தியைப் பெற அக்கு எனர்ஜி மெடிசன் தேவைப்படும். சில நேரங்களில் நம் உடலில் உள்ள புள்ளிகள் தூண்டப்பெறாததால் உடல் சோர்வுற்று சக்தியின்றி காணப்படும்போது இந்தச் சிகிச்சை பயன்படும். மசாஜ் சிகிச்சை முழு உடலுக்கும் அளிப்பதால் உடலில் ஏற்படும் வலிகள் நீங்கும்.  முழு உடலுக்கும் மசாஜ் அளிக்கவும் முன் பதிவு செய்ய வேண்டும்'' என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்