‘விவசாயி வயிற்றிலிருந்து உருளைக்கிழங்கு அளவிலான சிறுநீரகக் கல் அகற்றம் ’- மருத்துவர்கள் சாதனை! | Potato sized kidney stone removed from telangana man

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (20/11/2018)

கடைசி தொடர்பு:06:32 (20/11/2018)

‘விவசாயி வயிற்றிலிருந்து உருளைக்கிழங்கு அளவிலான சிறுநீரகக் கல் அகற்றம் ’- மருத்துவர்கள் சாதனை!

தெலங்கானா மாநிலத்தில், விவசாயி ஒருவரின் வயிற்றிலிருந்து உருளைக்கிழங்கு அளவிலுள்ள சீறுநீரகக் கல்லை அறுவைசிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். 

கரீம் நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவர்,  கடந்த 15 நாள்களாகக் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்தார். இந்நிலையில், அவர்  கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில், இடது புற சிறுநீரகத்தில் 8 செ.மீ அளவில் ( உருளைக்கிழங்கு சைஸில் ) சிறுநீரக் கல் இருப்பதைக் கண்டறிந்தனர். மாத்திரைகள் மூலமாக, சுமார் 18 சதவிகிதம் அளவுக்குதான் குறைக்க முடியும் என்பதால், அறுவை சிகிச்சையின் மூலம் கல்லை அகற்ற முடிவுசெய்தனர்.

நோயாளியின் சிறுநீரகம்

அதன்படி, சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர்  நெய்ல் என். திரிவேதி தலைமையிலான மருத்துவக் குழுவினர் , அறுவைசிகிச்சை மூலம் அந்த சிறுநீரகக் கல்லை அகற்றினர்.  ``இவ்வளவு பெரிய கல் இருந்தால், சிறுநீரகத்தின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆனால், நோயாளிக்கு அப்படியான பாதிப்புகள் அதிர்ஷடவசமாக ஏற்படவில்லை. அறுவைசிகிச்சைக்குப் பிறகு, தற்போது நோயாளி நலமுடன் உள்ளார்'' என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.