வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (21/11/2018)

கடைசி தொடர்பு:17:20 (21/11/2018)

டெங்கு பன்றிக்காய்ச்சலை சித்த மருந்துகள் குணப்படுத்தும்! - மருத்துவர் வேலாயுதம்

க்களை அச்சுறுத்தி வரும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய்களுக்குத் தீர்வாக சித்த மருத்துவர்கள் சில மருந்துகளைப் பரிந்துரைக்கிறார்கள்.

டெங்கு பன்றிக்காய்ச்சல்

``பன்றிக்காய்ச்சலின் தாக்கம் தொண்டைக் கரகரப்பு, சளியாகத் தொடங்கி, நுரையீரலைத் தாக்கும் நிமோனியாவாக மாறி, மூச்சுத்திறணல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது. பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகளைக் கொண்ட காய்ச்சலுக்கு, 'கபசுரக் குடிநீர்' என்ற கசாயத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யூகி முனிவர் என்ற சித்தர் வழங்கியுள்ளார். இதில், 15 வகையான மூலிகைப் பொருள்கள் உள்ளன. இதை மருந்தாகவும், தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தலாம். பன்றிக் காய்ச்சலால் ஏற்படும் உடல் வறட்சி, நீர்ச்சத்து இழப்பு, தாது உப்பு குறைபாடு ஆகியவற்றைச் சமன் செய்யும் ஆற்றல் இதற்கு உள்ளது" என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.  

``டெங்கு காய்ச்சலால் ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் சிதைவதால், ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இதைத் தடுப்பதற்கு நிலவேம்புக் குடிநீர் உதவும். கடந்த பத்தாண்டு காலமாக டெங்கு காய்ச்சலுக்குத் தீர்வாகவும், தடுப்பு மருந்தாகவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரஸ்களை அழிக்கக்கூடியது எனவும், உடலில் உள்ள செல்களைப் பாதுகாக்கிறது என்பது அனுபவபூர்வமாக மட்டுமின்றி, விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆடாதோடை மணப்பாகு என்ற மருந்தும் பேருதவியாக இருக்கும். இது சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும்.

டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய்களுக்கான அற்புதமான மருந்தைக் கையில் வைத்து உயிரிழப்புகள் நிகழ்வது துரதிர்ஷவசமானது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என நவீன மருத்துவமனைகளில் வழங்கப்படும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் சிகிச்சையுடன், சித்த மருந்துகளும் கூட்டு சிகிச்சையாக அளிக்கப்படும்போது உயிரிழப்புகளை நிச்சயமாகத் தடுக்க முடியும். உன்னதமான மனித உயிரைக் காப்பாற்றக்கூடிய பொக்கிஷமாகச் சித்த மருந்துகள் உள்ளபோது, அதை பாராமுகமாக இல்லாமல், முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்கிறார் வேலாயுதம்.

இது தொடர்பாக, சித்த மருத்துவர் வேலாயுதத்தின் முழுமையான ஆலோசனைகள் அடங்கிய வீடியோ!