வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (21/11/2018)

கடைசி தொடர்பு:16:50 (21/11/2018)

டெங்கு, பன்றிக்காய்ச்சலில் இருந்து முதியோர்களைப் பாதுகாப்பது எப்படி?- மருத்துவர் விளக்கம்

ழைக்காலங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய்களின் 'ஹை ரிஸ்க்' பட்டியலில் இருப்பவர்கள் முதியோர்.

முதியோர்

முதியோர்கள் என்னென்ன தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும், நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் முதியோர் நல மருத்துவர் டாக்டர் வி.எஸ்.நடராஜன்:

``இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அதிக முதியோர் மருத்துவர்களை நாடி வருகின்றனர். இந்தப் பருவநிலையில் இதுபோன்ற பிரச்னைகள் வருவதற்கு வைரஸ் தொற்றுதான் காரணம். மாரடைப்பு, பக்கவாதத்துக்கு அடுத்ததாக, முதியோர்களின் இறப்புக்கு மூன்றாவது முக்கியக் காரணமாக நிமோனியா டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் உள்ளன. 

வயதானவர்களுக்குக் காய்ச்சல் வருவது போன்ற அறிகுறி ஏற்பட்டால், உடனடியாக உடலுக்கு முழு ஓய்வு கொடுக்க வேண்டும். அவர்களை அதிகமாக அலைக்கழிக்கக் கூடாது. உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கத் தண்ணீர், பழச்சாறு, இளநீர் போன்றவற்றைப் பருக வேண்டும். 90 சதவிகிதம் முதியோருக்கு இரண்டு மூன்று நாள்களில் காய்ச்சல் குணமாகிவிடும். மூன்று நாள்கள் கழித்தும் குணமாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனையில் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் வி.எஸ்.நடராஜன்.

முதியோர்களுக்கான ஆலோசனைகள் அடங்கிய டாக்டர் வி.எஸ்.நடராஜனின் வீடியோ!