வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (23/11/2018)

கடைசி தொடர்பு:20:00 (23/11/2018)

‘கல்வி நிறுவனம், தொழிற்சாலைகளில் ஹெச்.ஐ.வி பரிசோதனை! - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

லக எய்ட்ஸ் தினத்தையொட்டி டிசம்பர் மாதம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்யும் திட்டம் தொடங்க இருப்பதாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத் திட்ட இயக்குநர் கே.செந்தில்ராஜ் கூறுகையில், ``தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எய்ட்ஸ் விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் மீம்ஸ் உருவாக்கத் திட்டமிட்டோம். உதாரணமாக, ஹெச்.ஐ.வி பாதித்த பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்த நோயின் பாதிப்பு இருக்காது. ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் வாய்ப்பு திட்ட இயக்குநர்உள்ளது. இது குறித்த விழிப்பு உணர்வு யாருக்கும் இல்லை. எனவே, இதை அனைவரும் அறியும் வகையில் இப்போது ஏற்பாடுகள் செய்துள்ளோம். இப்போது டீன் ஏஜினருக்கு எய்ட்ஸ் குறித்து அதிகம் தெரிவதில்லை. அவர்கள் பயன்படுத்தும் செல்போனில் நிறைய 'ஆப்ஸ்' வைத்துள்ளனர்.

இது தவிர ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை அவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அவர்களை 'மீம்' உருவாக்க வைத்து போட்டி அறிவித்துள்ளோம். கடந்த ஆண்டு எங்கள் துறை சார்பில் மட்டும் இப்போட்டியை  நடத்தினோம். இந்த ஆண்டு மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் கார்ட்டூன் வரைந்து அனுப்பச் சொல்லி இருக்கிறோம். இது புள்ளிராஜா விளம்பரம் மாதிரி மக்களை எளிதில் சென்றடையும். இதில் வெற்றி பெறுவோருக்கு பரிசளிக்க இருக்கிறோம். இதுதவிர டிசம்பர் 1-ம் தேதி  எய்ட்ஸ் தினம் வருகிறது. இதையொட்டி ஹெச்.ஐ.வி பாதித்த மக்களிடமும் ஏ.ஆர்.டி சிகிச்சை எடுப்பவர்களிடம் நேரில் சென்று அவர்கள் சிகிச்சை எடுத்து வரும் அனுபவங்களை வீடியோவாக எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

எச். ஐ. வி பரிசோதனை

 

இதை மக்கள் மத்தியில் திரையிட்டுக்காட்ட இருக்கிறோம். இந்த ஆண்டில்  'கிவ் யுவர் ஸ்டேடஸ்' என்ற பெயரில் ஒரு ஐடியா வைத்துள்ளோம். எய்ட்ஸை அறிய மிக எளிமையான பரிசோதனை செய்யும் முறை உள்ளது. அதன்படி இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு கல்வி நிறுவனங்கள், கல்லூரி, தொழில் நிறுவனங்களுக்கு எங்களது அலுவலர்கள் நேரில் சென்று ' எய்ட்ஸ் பரிசோதனை' செய்ய இருக்கிறார்கள். இம்முறைப்படி மூன்று விதமான பரிசோதனை செய்யலாம்.

நிறுவனம்

அதில் கிடைக்கும் முடிவின்படி பாதிப்பு இருப்பவர்களை ரகசியமாக அழைத்து ஆலோசனை வழங்கி அவர்கள் சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் பயப்பட வேண்டாம். முறையாக ஏ.ஆர்.டி சிகிச்சை எடுத்துக்கொண்டால் 30 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ முடியும்" என்றார் அவர்.