வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (26/11/2018)

கடைசி தொடர்பு:20:00 (26/11/2018)

மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

ன்றைய பரபரப்பான சூழல்களுக்கு மத்தியில், போக்குவரத்து நெரிசல்களைக் கடந்து வாகனப்புகையைத் தினம்தினம் சுவாசித்தபடி பயணிக்கவேண்டிய நிலை உள்ளது. இவற்றைத் தினம் தினம் சந்திக்கும் பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. குறிப்பாக, வாகனப்புகையிலிருந்து வெளியாகும் நச்சு மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். 

மார்பகப் புற்றுநோய்

அமெரிக்கா மற்றும் கனடாவை இணைக்கும் அம்பாசிடர் என்ற வணிக எல்லைப்புற பாலத்தில் (Ambassador Bridge) பணிபுரியும் பெண்கள் மத்தியில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. நாளொன்றுக்கு ஏறத்தாழ 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வாகனங்கள் செல்லும் பரபரப்பான பாலம் அது. அந்தப் பகுதியில், கடந்த 20 ஆண்டுகளாகப் பணிபுரியும் பெண் ஒருவரின் உடலைப் பரிசோதித்துப் பார்த்தபோது, அவருக்கு 'மார்பகப்புற்றுநோய்' பாதித்திருப்பது தெரியவந்தது. மேலும், இந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு, மற்றவர்களைக் காட்டிலும் 16 சதவிகிதம் அதிகமாகப் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துவது ஆய்வின் முடிவில் தெரியவந்தது.

அம்பாசிடர் பிரிட்ஜ்

இந்த ஆய்வை முன்னின்று நடத்திய மைக்கேல் கில்பெஸ்ட்ரான் இதுபற்றிப் பேசும்போது, காற்றிலுள்ள 'மேம்மரி கார்சினோஜென்ஸ்' (mammary carcinogens) தான் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணமாக உள்ளது எனக் கூறியுள்ளார். காற்று மாசுபாடு மட்டுமின்றி இரவுநேரப் பணியில் இருப்பதும், இவ்வகை புற்றுநோய்க்கான காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அளவுக்கதிகமான மாசு காரணமாகவே புற்றுநோய் ஏற்பட்டுள்ளதால், இந்த நோய் பாதிப்பை 'பணி இடத்தில் ஏற்படும் பாதிப்புகளின்' (New occupational disease) கீழ் புதிதாக இணைத்துள்ளனர். 

காற்று மாசுபாடு

புற்றுநோயைத் தடுப்பதற்காக, மனித உடலில் இருக்கும் BRCA1 and BRCA2 என்ற மரபு வகைகள், அளவுக்கதிகமான மாசு கலந்த காற்றைச் சுவாசிக்கும்போது, தனது செயல்திறனை இழந்துவிடுவதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. இத்தகைய மரபு வகைகள் எதனால் செயலிழக்கின்றன என்பது குறித்தே ஆய்வின் அடுத்தகட்டம் இருக்குமென ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு, அப்பகுதியில் இருக்கும் மற்றவர்களுக்கு மார்பகப் புற்றுநோய்குறித்த விழிப்புஉணர்வு தரப்பட்டுவருகின்றன. மேலும், 'தொழிற்சாலைகள் மற்றும் அரசாங்கம் தாமாக முன்வந்து, காற்று மாசுபாட்டைத் தடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்' என்று தங்களது ஆய்வின் முடிவில் குறிப்பிட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க