உடல் உறுப்பு தானம்! - தொடர்ந்து நான்காவது முறையாகத் தமிழகம் முதலிடம் | Organ Donation: Tamil Nadu Adjudged Best State For The fourth Time

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (27/11/2018)

கடைசி தொடர்பு:14:10 (27/11/2018)

உடல் உறுப்பு தானம்! - தொடர்ந்து நான்காவது முறையாகத் தமிழகம் முதலிடம்

டல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாகத் தமிழகம் தொடர்ந்து நான்காவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகம் முதலிடம்

டெல்லியில் இன்று 9-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழா மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவில் உடல் உறுப்பு தானத்தில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்ததற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான விருதை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர்கள் அஷ்வின் குமார் சௌபே மற்றும் அனுபிரியா பட்டேல் ஆகியோரிடமிருந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார். 

விருதைப் பெற்றுக்கொண்டு அவர் பேசியதாவது, ``தொடர்ந்து நான்காவது முறையாக இந்த விருதைப் பெறுவதில் பெருமையாக இருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 1,198 கொடையாளர்களிடமிருந்து 6,886 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மூலம் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட விஞ்சி நிற்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகச் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் அதிகபட்சமாக ரூ.35 லட்சம் வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையைத் தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களுக்கும் விரிவுபடுத்தி வருகிறோம்’’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close