புகைபிடிக்கும் அப்பாக்களால் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு!  | Sperm count 50% lower in sons of fathers who smoke: Study

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (28/11/2018)

கடைசி தொடர்பு:17:55 (28/11/2018)

புகைபிடிக்கும் அப்பாக்களால் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு! 

``னைவி கருவுறும் சமயத்தில் புகைபிடிக்கும் கணவரால், அவர்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளிடம் உயிரணுக்கள் 50 சதவிகிதம் குறைவாக இருக்கலாம்" என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.

சிகரெட் பிடிப்பதால் ஆண்மைகுறைவு

``புகைபிடிக்கும் பழக்கம் தலை முதல் கால் வரை உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை உண்டாக்கும்" என்பது மருத்துவர்கள் தொடர்ச்சியாகக் கூறும் எச்சரிக்கை. இந்நிலையில், புகைப்பழக்கத்தால் புகைபிடிப்பவர்களின் உடல்நலன் மட்டுமல்லாது, அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையையும் பாதிக்கும் என்று ஸ்வீடனைச் சேர்ந்த லுண்ட் பல்கலைக்கழம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தை

 `புகைபிடிக்கும் பழக்கமுள்ளவர்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து அந்தப் பல்கலைக்கழகம் அண்மையில் ஓர் ஆய்வு மேற்கொண்டது. 17 முதல் 20 வயதுக்குட்பட்ட 104 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த ஆய்வின் முடிவில், ``மனைவி கருவுறும் சமயத்தில் கணவர்  புகைபிடித்திருந்தால், அவற்றில் உள்ள நிகோட்டின் முதலான நச்சுகள் பிறக்கப்போகும் குழந்தைகளிடமும் மரபுரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என்று தெரியவந்திருக்கிறது. அதாவது, ஒருவர் சிகரெட் பிடிப்பது அவரை மட்டும் பாதிப்பது இல்லை. அவருக்குப் பிறக்கும் ஆண் குழந்தைக்கும் மரபுரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகைபிடிக்காத அப்பாக்களைவிட புகைபிடிக்கும் அப்பாக்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் விந்துவில் 50 சதவிகிதம் குறைவான உயிரணுக்கள் இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close