அரசு மருத்துவமனைக்கு தி.க மாவட்ட மகளிரணித் தலைவியின் உடல் தானம்! | retired teacher's body donated to the government hospital

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (28/11/2018)

கடைசி தொடர்பு:20:46 (28/11/2018)

அரசு மருத்துவமனைக்கு தி.க மாவட்ட மகளிரணித் தலைவியின் உடல் தானம்!

டல்நலமின்றி இறந்த ஓய்வுபெற்ற ஆசிரியை உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு தானம் வழங்கப்பட்டது.

உடல் தானம்
        

கண், சிறுநீரகம், ரத்தம் போன்றவற்றை தானமாக வழங்குவது இப்போது வழக்கமாகிவிட்டது. இவ்வாறு வழங்கப்படும் உடலை மருத்துவம் படிக்கும் மாணவர்களின் கஸ்தூரிபாய் உடற்கூறியல் கல்விக்குப் பயன்படுத்துகிறார்கள்.

ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்கள், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தாக்குதல், புற்றுநோய், காசநோய் பாதிப்பு உள்ளவர்கள் உடல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளையைச் சேர்ந்தவர் பால் ராஜேந்திரன். இவர் திருநெல்வேலி மண்டல திராவிடர் கழகத் தலைவராக இருக்கிறார். இவரின் மனைவி கஸ்தூரிபாய் (71). இவர் ஆசிரியைப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திராவிடர் கழகத்தின் மாவட்ட மகளிரணித் தலைவியாக இருந்து வந்தார். இவர் உடல் நலமின்றி திங்கள்கிழமை இறந்தார். 

இவர் ஏற்கெனவே தனது உடலைத் தானமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அளிப்பதாகப் பதிவு செய்திருந்தார். இதையடுத்து அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. பொதுவாக மருத்துவமனையில் உடலை முறைப்படி பெற்றுக்கொண்டதும் 'எம்பார்மிங்' செய்வார்கள். அவ்வாறு செய்வதால் உடல் கெடாது.