அரசு மருத்துவர்கள் ஒத்துழையாமை இயக்கப் போராட்டம்! - வரும் 4-ம் தேதி தொடங்குகிறது  | Government Doctors Disobedience Movement

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (29/11/2018)

கடைசி தொடர்பு:17:40 (29/11/2018)

அரசு மருத்துவர்கள் ஒத்துழையாமை இயக்கப் போராட்டம்! - வரும் 4-ம் தேதி தொடங்குகிறது 

த்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு மருத்துவர்களுக்கும் வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும், சிறப்பு மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவர்கள் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தை நடத்துவதென்று தீர்மானித்துள்ளனர். 

 அரசு மருத்துவர்கள்

அடுத்த மாதம் (டிசம்பர்) 4 -ம் தேதி முதல் நடைபெற உள்ள இந்தப் போராட்டத்தில், மருத்துவர் முத்துட்சுமி மகப்பேறு உதவித்திட்டப் புறக்கணிப்பு, மாதாந்திர, வாராந்திர, மகப்பேறு இறப்புக் காணொளி திறனாய்வுக் கூட்டங்கள் புறக்கணிப்பு உள்ளிட்ட ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளும் வலியுறுத்தப்படவுள்ளன. 

இந்தப் போராட்டத்தின் முதல்கட்டமாக  டிசம்பர்  4- ம் தேதி புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை முழுமையாக நிறுத்துவது, டிசம்பர் 8-ம் தேதி முதல் 13- ம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள அனைத்து அறுவை சிகிச்சைகளையும் நிறுத்துவது, முதல்வரின் விரிவான காப்பீட்டுத்  திட்டம் மற்றும் மருத்துவ மாணவர்களின் வகுப்புகளைப் புறக்கணிப்பது என முடிவெடுத்துள்ளனர். அத்துடன்  ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்,  மூன்று நாள்கள் தொடர் அடையாள வேலைநிறுத்தம் செய்வது எனவும் தீர்மானித்துள்ளனர்.  


[X] Close

[X] Close