`ஜனவரிக்குள் உங்கள் விவரங்களைப் பதியுங்கள்!’ - 70 வயதுடைய டாக்டர்களுக்கு கவுன்சிலில் அறிவுறுத்தல் | Aged Doctors should have register themselves in Tamilnadu Medical Council before Jan 31

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (30/11/2018)

கடைசி தொடர்பு:18:20 (30/11/2018)

`ஜனவரிக்குள் உங்கள் விவரங்களைப் பதியுங்கள்!’ - 70 வயதுடைய டாக்டர்களுக்கு கவுன்சிலில் அறிவுறுத்தல்

70 வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்கள், ஜனவரி 31-ம் தேதிக்குள் தங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவர்

மருத்துவக் கவுன்சில் பதிவேட்டின்படி தமிழகத்தில் மொத்தம் 1,40,000 மருத்துவர்கள் இருக்கின்றனர். அவர்களில், ஜூன் 2019-க்குப் பிறகு ஏறத்தாழ 15,000 பேர் வயது முதிர்ந்த (70 வயதுக்கு மேற்பட்ட) மருத்துவர்களாக இருப்பார்கள். அவர்களில் பெரும்பாலானோர் 90 வயதைக் கடந்திருப்பார்கள். இந்த 15,000 பேரில், எத்தனை பேர் மருத்துவப் பயிற்சி செய்கிறார்கள், எத்தனை பேர் நிறுத்திவிட்டார்கள், எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பது போன்ற அனைத்துத் தகவல்களும் சேகரிக்கப்பட்டு பதிவேடு புதுப்பிக்கப்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட ஊர்களைச் சேர்ந்த வயது முதிர்ந்த மருத்துவர்கள் யார் யார், அவர்களின் தொடர்பு எண், அவர்களிடம் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு என அனைத்து விவரங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்தத் தகவல்கள் அவசரக் காலத்தில் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் மருத்துவக் கவுன்சில் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

மருத்துவர்கள்

எனவே, ஜனவரி 31-ம் தேதிக்குள் தங்களது பதிவுச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பணி அனுபவச் சான்றிதழ் என அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். நேரில் வர முடியாத வயதானவர்கள் இந்தத் தகவல்களைத் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். அப்படி ஆதாரங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் பிப்ரவரி 1 முதல் அவர்கள் மருத்துவப் பயிற்சியில் ஈடுபடக் கூடாது.  அதேபோல் இறந்தவர்களின் குடும்பத்தினர் தாமாக முன்வந்து அவர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close