வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (30/11/2018)

கடைசி தொடர்பு:15:21 (04/12/2018)

"மகப்பேறு முதல் மெனோபஸ் வரை" - பெண்களுக்கு நலம் தரும் நல்லெண்ணெய்“

சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருளாக இருந்து, நமது உணவிற்கு சுவையைக் கூட்டுவது எண்ணெய். உணவிற்கு சுவை சேர்ப்பதுமட்டுமின்றி நமது உடலின் ஆரோக்கியத்தையும் எண்ணெய் மேம்படுத்துகிறது. குறிப்பாக எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் ஆரோக்கியத்திற்கான முதன்மை விஷயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அக அழகு மற்றும் புற அழகிற்கான சிறந்த மருந்தாக விளங்கும் நல்லெண்ணெய்யில், செம்பு(Copper), மாங்கனீஸ் (Manganese), ஜிங்க் (Zinc) என்னும் கனிமச்சத்து நிறைந்துள்ளது.

கால்சியத்தை (Calcium) அதிகரித்து எலும்புகளை உறுதியாக்கும் குணத்தைப் பெற்றிருக்கும் நல்லெண்ணெய்யை முக்கியமாக பெண்கள் உட்கொள்ளவேண்டியது அவசியம். முக்கியமாக, பூப்பெய்துதல், மகப்பேறு, மெனோபாஸ் போன்ற காலக்கட்டங்களில் பெண்களைப்பலப்படுத்த உதவிகரமாக இருக்கும் ஆரோக்கியப் பொருள் நல்லெண்ணெய். பூப்பெய்தும் பெண்களுக்குக் குறிப்பிட்ட நாட்கள் வரை பச்சை முட்டையுடன், நல்லெண்ணெய்யைக் குடிக்கச் சொல்வார்கள். அதில் இருக்கும் நல்ல கொழுப்புச் சத்து அவர்களுக்கு வலிமையைத்தருகிறது. இதற்குப் பின் தொடர்ந்து உண்ணும் உணவுகளிலும் நல்லெண்ணெய் சேர்த்து உண்டு வருவதினால், பெண்கள் ஆரோக்கியத்தைக் காப்பாற்றும் ஆயுட்கால காப்பீடு போல நல்லெண்ணெய் செயல்படுகிறது. இதனால் மகப்பேறு, மெனோபாஸ் போன்ற காலக்கட்டங்களிலும் பெண்கள் வலிமையாக இருக்கலாம்.

இதைத் தவிர, நல்லெண்ணெய்யில் இருக்கும் புரதச் சத்து தசைகளை வலிமையாக்க உதவுகிறது. மேலும், தலைமுடி, சருமப் பராமரிப்புக்கு, பளிச் பற்களுக்கு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்த அழுத்தம், சுவாசப் பிரச்னை, சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் நல்லெண்ணெய் அருமருந்தாக இருக்கிறது. இருப்பினும் இத்தனை நன்மைகளைத் தரும் நல்லெண்ணெய்யை நாம் உபயோகிக்கும் முன் அதனின் தரத்தைக் கண்டறிவது மிகவும் அவசியம். 

மரச்செக்கு எண்ணெய்:

நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற பாரம்பர்யங்களில் மரச்செக்கும் ஒன்று. மரச்செக்கில் ஆட்டப்பட்டு தயாரிக்கப்படும் எண்ணெய் சூடேறாது. இதனால் எண்ணெய்யின் தன்மை மாறாமல், அதிலுள்ள மொத்தச் சத்தும் நமக்கு அப்படியே கிடைக்கிறது. தவிர, செக்கில் ஆட்டப்படும் பொருட்களில் இருந்து எண்ணெய்யை பிரித்தெடுக்க வெல்லம், பனங்கருப்பட்டி சேர்க்கப்படுகிறது. எண்ணெய் கெட்டுப் போகாமல் இருக்க எலுமிச்சை சேர்க்கப்படுகிறது. இதனால் மரச்செக்கில் ஆட்டப்படும் எண்ணெய் நமக்கான அற்புத மருத்துவமாக விளங்குவதோடு, சுவை, மணம், தரத்துடன் ஆரோக்கியமானதாகவும் விளங்குகிறது.

செக்கோ:

நமது பாரம்பர்யமிக்க மரச்செக்கு மூலம் தயாரிக்கப்படும் சிறந்த தரமான எண்ணெய்யை நீண்டகாலமாக மக்களுக்கு வழங்கி வருகிறது 'Chekko' (செக்கோ) நிறுவனம். மருத்துவ குணங்கள் நிறைந்த நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மற்றும்விளக்கெண்ணெய்யை செக்கோ விற்பனை செய்து வருகிறது. ஆரோக்கியமான எண்ணெய்களை, பிளாஸ்டிக் பாட்டிலில் இல்லாமல் கேன்களில் செக்கோ விற்பனை செய்கிறது. ஆகவே, வலிமை தரும் இயற்கை முறையினாலான செக்கோ எண்ணெய்களை பெறுங்கள். மேலும் விவரங்களுக்கு 9176 679 154 / contact@agaramfoods.com

நீங்க எப்படி பீல் பண்றீங்க