குறட்டை விடும் பெண்களே உஷார்! இதய பாதிப்புகள் ஏற்படலாம் | New Research about snoring

வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (01/12/2018)

கடைசி தொடர்பு:17:35 (01/12/2018)

குறட்டை விடும் பெண்களே உஷார்! இதய பாதிப்புகள் ஏற்படலாம்

குறட்டை விடுவதால் இதயத்தின் சுவர் தடித்து, இடது அறையின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன என்று ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தூக்கத்தின்போது குறட்டை விடுவதால், இதயம் தொடர்பான பாதிப்புகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிக அளவில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தூக்கம்

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த முனிக் பல்கலைக்கழகம், ஆண்கள் பெண்கள் என 4,877 பேரிடம் ஆய்வு நடத்தியது. ஆய்வில், தூக்கத்தில் மூச்சுத்திணறல் குறைபாடு (OSA) மற்றும் குறட்டை விடுதல் ஆகிய பிரச்னை இருப்பவர்களுக்கு இதயத்தின் இடது அறையின் செயல்பாடு பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டது. குறட்டை விடுவதால் இதயத்தின் சுவர் தடித்து, இடது அறையின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் ரத்தத்தை பம்ப் செய்யும் இதயத்தின் பணி பாதிக்கப்பட்டு, இதய நோய்கள் ஏற்படுகின்றன.

தூக்கம்

எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனையின்மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில், ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே இதயத்தில் பாதிப்பு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. குறட்டை விடுதல் பிரச்னை மட்டும் இருப்பவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் குறைபாடும் ஏற்படலாம். அதற்கான முதல் அறிகுறிதான் குறட்டை. எனவே, 'தூக்கத்தில் குறட்டை விடுகிறாய். உன் பக்கத்தில் படுத்து எனக்கு தூக்கமே வரல' என்று யாரேனும் புகார் தெரிவித்தால், அவர்கள் மீது கோபப்படாமல் உடனே மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.

 


[X] Close

[X] Close