அரிசி அளவு இருக்கும் புற்றுநோய் பாதிப்பைக்கூட கண்டுபிடிக்கலாம்! | Cancer can be cured by Low-dose CT scan

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (03/12/2018)

கடைசி தொடர்பு:19:40 (03/12/2018)

அரிசி அளவு இருக்கும் புற்றுநோய் பாதிப்பைக்கூட கண்டுபிடிக்கலாம்!

புற்றுநோய்

புகைப்பழக்கம் உடையவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்க அதிக வாய்ப்புள்ளது என்பது நாம் அறிந்ததே. அதேசமயம் இந்தப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறியாத காரணத்தால் பல உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம். இதில். அந்த நோயின் பாதிப்பை மூன்றாம் அல்லது நான்காம் நிலையில் கண்டறியப்பட்டவர்கள்தான் அதிகமாக உயிரிழந்துள்ளனர். பொதுவாக நுரையீரல் உள்ளிட்ட அனைத்து வகை புற்றுநோயையும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். 

புற்றுநோய் குறித்த கருத்தரங்கு

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற நுரையீரல் புற்றுநோய் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் பேசிய புற்றுநோய் மருத்துவத் துறைத் தலைவர் கே.கலைச்செல்வி, ``புகைப்பழக்கம் உடையவர்கள் புற்றுநோய் பாதித்த பின்னர்தான் மருத்துவமனைக்கு வருகின்றனர். அதுவரை புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிய முடியவில்லை. ஆனால், `லோ டோஸ் சிடி ஸ்கேன்' (Low-dose CT scan) கருவியின் மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.

புற்றுநோய்

ஓர் அரிசி அளவில் புற்றுநோய் பாதிப்பு இருந்தாலும் கூட இந்தக் கருவியால் கண்டறிந்து விடலாம். சிலர், ' புகைப்பிடிக்கும் பழக்கம் இரண்டு வருஷங்களாகத்தான் இருந்தது. இதனால் எனக்கும் புற்றுநோய் வர வாய்ப்புண்டா?' என்று கேட்பார்கள். புகைப்பழக்கத்தால் உள்ளுறுப்புகள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் இதில் கண்டறிய முடியும். ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் எளிதாகச் சிகிச்சை அளிக்க முடியும்" என்றார்.


[X] Close

[X] Close