தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? 8 மணி நேரம் தூங்குங்கள்! | sufficient sleep leads to good marks in exams

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (04/12/2018)

கடைசி தொடர்பு:16:40 (04/12/2018)

தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? 8 மணி நேரம் தூங்குங்கள்!

படித்தால் மட்டும் போதாது, தூக்கமும் போதிய அளவு இருந்தால்தான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறமுடியும் என்று கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இரவு தூக்கத்தைத் தியாகம் செய்து கண்விழித்துப் படிப்பார்கள். தேர்வு சமயம் இரவு நேரத்தில் தூக்கமா, படிப்பா இரண்டில் எதைத் தியாகம் செய்வது என்றால், தூக்கத்தைத்தான் பெரும்பாலான மாணவர்கள் தியாகம் செய்வார்கள். ஆனால் படித்தால் மட்டும் போதாது, தூக்கமும் போதிய அளவு இருந்தால்தான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்று கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

தேர்வில் வெற்றி

அமெரிக்காவில் பேலர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தேர்வு நேரத்தில் கல்லூரி மாணவர்களை, தொடர்ந்து ஐந்து நாள்கள் இரவு 8 மணி நேரம் உறங்க வைப்பதற்கான போட்டி ஒன்று நடத்தப்பட்டது.

தேர்வு
 

அந்தப் போட்டியில் பங்கேற்று இரவு 8 மணி நேரம் தூங்கிய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்றுத் தேறியுள்ளனர் என்று ஆராச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதனால், இந்த ஆராய்ச்சி எல்லாம் நன்றாகப் படித்து தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத்தான். புத்தகத்தின் பக்கமே போகாமல், இரவு 8 மணி நேரம் குறட்டை விட்டுத் தூங்கிவிட்டு, தேர்வுக்குச் சென்றால் மதிப்பெண் வராது, அரியர் தான் வரும்.


[X] Close

[X] Close