வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (05/12/2018)

கடைசி தொடர்பு:17:40 (05/12/2018)

நீட்தேர்வுக்கு விண்ணப்பிக்க 7-ம் தேதி கடைசி நாள்!

ம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இளநிலை மருத்துவப் படிப்புக்குகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

 நீட்தேர்வு

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு எழுத வேண்டியது அவசியமாகும். இந்தத் தேர்வை  தேசிய தேர்வு முகமை (National Testing Agency) நடத்துகிறது.  இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு பொதுப்பிரிவினருக்கு வயது 25 எனவும், ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வயது 30 எனவும் இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயம் செய்திருந்தது. 2019-ம் ஆண்டு தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 நீட்தேர்வு

இந்நிலையில் பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பை தளர்த்துமாறு மாணவர்கள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவினரும் தேர்வு எழுதலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் டிசம்பர் 7-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள் 8-ம் தேதி கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும்  தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.