`நுரையீரல் தொற்றை சரிசெய்ய குளவி விஷம்!' - நியூயார்க் எம்.ஐ.டி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு | New York MIT Students found Antibodies from Wasp venom to treat Lung disease

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (10/12/2018)

கடைசி தொடர்பு:15:40 (10/12/2018)

`நுரையீரல் தொற்றை சரிசெய்ய குளவி விஷம்!' - நியூயார்க் எம்.ஐ.டி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு

குளவியின் விஷத்தில் ஆன்டி-மைக்ரோபியல் பெப்டைட்ஸ் (Antimicrobial peptides) என்ற நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட உயிரணு இருப்பதாக நியூயார்க்கின் எம்.ஐ.டி பல்கலைக்கழக இன்ஜினீயர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது, நுரையீரலில் ஏற்படக்கூடிய தொற்று மற்றும் கிருமிகளை முழுமையாக அழிக்கவல்லது என்கின்றனர் அந்த ஆய்வாளர்கள். இந்த `ஆன்டி-மைக்ரோபியல் பெப்டைட்ஸ்'  மிகவும் குறிப்பாக, தென் அமெரிக்காவில் உள்ள குளவிகளின் விஷம் மற்றும் அங்கிருக்கும் சில தேனீக்களின் விஷம் ஆகியவற்றில்தான் இருக்கின்றதென அவர்கள் கூறியுள்ளனர்.

குளவி விஷம்

குளவி விஷம், நுரையீரலில் ஏற்படக்கூடிய தொற்று மற்றும் கிருமிகளை அழிப்பது குறித்து எலிகளிடையே நடத்தப்பட்ட சோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மனித உடலில் சில ஒவ்வாமையை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. எனவே, மனிதர்களுக்கு இதை மருந்தாகப் பரிந்துரைப்பது தொடர்பான ஆய்வுகள், இன்னமும் முழுமையடையவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அடுத்தகட்ட ஆய்வில், மனித உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் குறிப்பிட்ட மூலக்கூற்றைக் கண்டறிந்து, அதன் தன்மையை மாற்றியமைக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

நுரையீரல்

இந்த ஆய்வுக்குழுவில் இடம்பெற்ற மருத்துவர் சீசர் இதுகுறித்து கூறும்போது, ``பாதிக்கப்பட்ட எலிகளுக்குக் குறிப்பிட்ட இந்த பெப்டைட்ஸைக் கொடுக்கும்போது, நான்கு நாளில் அவற்றின் உடம்பிலுள்ள தொற்றுகள் அனைத்தும் நீங்கிவிட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்தே, நுரையீரல் பிரச்னையுள்ள மனிதர்களின் செல்களுக்கு, இவற்றை செலுத்திப் பரிசோதித்தோம். அதில் மனித உடலுக்கு இவை ஒவ்வாமையை ஏற்படுத்துவது தெரியவந்தது. மேலும், மனித உடலில் நச்சுத்தன்மையை அதிகரிப்பதும் தெரியவந்துள்ளது. எனவே, இந்த பெப்டைட்ஸின் மூலக்கூறு மற்றும் அதன் தன்மையை முழுமையாகக் கண்டறிந்து வருகிறோம். முழுமையாக அவற்றைத் தெரிந்துகொண்டபின், மனித உடலுக்கு ஏற்றவாறு அவற்றின் செயல்பாடுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த உள்ளோம். அதன்பிறகே, எங்களின் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்" என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க