ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை விழிப்பு உணர்வு நிகழ்ச்சி! | This short news about heart surgery operation awareness program

வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (11/12/2018)

கடைசி தொடர்பு:07:12 (11/12/2018)

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை விழிப்பு உணர்வு நிகழ்ச்சி!

சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியில் நோயாளிகள் விழிப்பு உணர்வு தொடர்பான நிகழ்ச்சி இன்று (10.12.18)  நடைபெற்றது. அதில் இதயம், இதய அறுவை சிகிச்சை தொடர்பான நோயாளிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் பதில் அளித்து உரையாற்றினார்கள். 

விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுநல மருத்துவமனையில் நோயாளிகளின் சந்தேகம் தீர்ப்பதற்கும், அவர்களின் ஐயங்களைப் போக்குவதற்கும் அடிக்கடி விழிப்பு உணர்வு தொடர்பான கருத்தரங்கு நடைபெறுவதுண்டு. அதையொட்டி இன்று நடைபெற்ற விழிப்பு உணர்வு கருத்தரங்கில் இதய அறுவை சிகிச்சைப் பிரிவு இயக்குநர் மருத்துவர் பா.மாரியப்பன், உதவிப் பேராசிரியர் மருத்துவர் சிவன்ராஜ் ஆகியோர் நோயாளிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்கள். 

இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் (Beating Heart Bypass Surgery) அறுவை சிகிச்சை, வால்வு மாற்று அறுவை சிகிச்சை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்தார்கள்.

இறுதியாக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளி ஒருவர் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து அனைவரிடமும் பகிர்ந்துகொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க