`ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு! | University of Michigan warns diabetes patients

வெளியிடப்பட்ட நேரம்: 23:41 (11/12/2018)

கடைசி தொடர்பு:09:06 (12/12/2018)

`ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!

லக அளவில் பெருகிவரும் நோய்களில் அதிகம் பேரைப் பாதிப்பது சர்க்கரை நோயாகும். இதிலிருந்து மீள பல்வேறு சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன. 

சர்க்கரை நோய்

இவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முதற்கட்ட அறிவுரையே, `சரியாக மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டும்' என்பதுதான். இதற்காக மருத்துவமனை அல்லது பரிசோதனைக் கூடத்துக்குச் சென்று பரிசோதனை செய்வது நோயாளிகளின் வழக்கம். ஆனால், அங்கு செல்லாமல் வீட்டிலேயே சர்க்கரை அளவைப் பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள குளுக்கோமீட்டர் (Glucometer) என்ற கருவி பயன்படுகிறது. 

சின்னச் சின்ன மருந்துக் கடைகளிலும்கூட எளிமையாகக் கிடைக்கும் இக்கருவியிலுள்ள, 'டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ்' மூலமாகத்தான் ரத்தத்தைக் கருவியினுள் செலுத்தமுடியும். இதன்மூலம் குளுக்கோஸ், சர்க்கரை அளவை உடனே தெரிந்துகொள்ளலாம். இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள மிசிகன் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய  ஆய்வில், ஒரேநாளில் பலமுறை இந்தக் கருவியை சர்க்கரை நோயாளிகள் உபயோகப்படுத்துவது தெரியவந்துள்ளது.  

சர்க்கரை நோய்

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறும்போது, ``இந்த  ஆய்வின் நோக்கமே, `தேவையில்லாமல் டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸை உபயோகப்படுத்துபவர்கள் எத்தனை பேர்' என்பதைக் கண்டறிவதுதான். குளுக்கோமீட்டர் கருவியில் மறுசுழற்சிக்கு வித்திடாமல் இருப்பது டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ் வகைகள்தாம். ஒருமுறை பயன்படுத்தியதை மறுமுறை பயன்படுத்தக்கூடாது. அதனாலேயே, ஒவ்வொரு முறையும் அதற்கென பணத்தைச் செலவிட வேண்டியிருக்கும். இதில் கவனிக்கப்படவேண்டியது உடலின் ரத்தத்துளிகள். ஒவ்வொரு முறையும் கைகளைக் குத்திக்கொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்" எனக் கூறியுள்ளனர். மேலும், டைப் 2 சர்க்கரை நோயாளிகள், சரியான உணவுமுறை, மருந்து மாத்திரைகளை சரியாகப் பின்பற்றிவந்தால் குளுக்கோமீட்டர் சோதனை வேண்டாம் என்பதுதான் மருத்துவர்களின் நிலைப்பாடு. 

சர்க்கரையின் அளவை கண்டறியும் கருவி

இன்சுலின் உட்கொள்ளாதவர்கள் மற்றும் வருடத்துக்கு மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட முறை டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ் அதிகம் வாங்குபவர்கள் யார் என்பதை அறிய இந்த ஆய்வு 3,70,000 பேரிடம் நடத்தப்பட்டது. ஏறத்தாழ 80,000 பேரில்  23 சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி தங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வது தெரியவந்துள்ளது. இதில்  50,000 பேர் தவறான மருந்துகளை உட்கொள்கின்றனர். அதில் 30,000 பேர் தங்களை அறியாமலேயே சர்க்கரையைக்  குறைக்கும் தவறான மாத்திரைகளையும், 19,000 பேர் மாத்திரையே உட்கொள்ளாமலும் இருக்கின்றனர். இதில் சரிபாதி பேர், ஒவ்வொரு நாளும் காரணமேயின்றி இரண்டு முறை வீட்டிலேயே சுயபரிசோதனை செய்துகொள்கின்றனர். எனவே, பயத்திலோ பதற்றத்திலோ பலமுறைகள் கைகளைக் குத்திக்கொள்வது, ஆபத்தானது. எனவே, மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது" என்கின்றனர் ஆய்வாளர்கள். ஒருவேளை உங்களுக்கு அப்படி ஒரு பழக்கம் இருந்தால் இன்றே அதை மாற்றிக்கொள்ளுங்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க