முதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்! | Free pneumonia vaccine program for elderly people

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (12/12/2018)

கடைசி தொடர்பு:20:15 (12/12/2018)

முதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்!

ந்தியாவிலேயே முதல் முறையாகத் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட முதியோர் இல்லங்களில் தங்கியுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு நிமோனியா நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. 

முதியோர்

சென்னை வியாசர்பாடி, புனித தாமஸ் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு சமூகநலம், சத்துணவுத் திட்டம், சுகாதாரம் ஆகிய துறைகளின் மூலமாக கட்டணமில்லாமல் நுரையீரல் சுவாச தொற்று (நிமோனியா) தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இன்று (12.12.2018) தொடக்கி வைத்தனர். 

முதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி

நிமோனியா நோய் முதியோர்களையும், சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் உள்ளவர்களையும் அதிகம் தாக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமன்றி, உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களையும் அதிகம் தாக்க வாய்ப்புள்ளது. இந்த நோய்களிலிருந்து முதியோர்களைக் காக்க தடுப்பூசி அவசியமாகும். 

முதியோர்கள்

இந்தத் தடுப்பூசி தசை வழியாக 0.5 எம்.எல் அளவில் செலுத்தப்படும். பிசிவி-13 (Pneumococcal congjugate vaccine) தடுப்பூசி அனைத்து முதியோர்களுக்கும் வழங்கப்படும். அதேபோல, நிமோனியா தொற்று நோய் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளவர்களுக்கு பி.பி.எஸ்.வி- 23 (Pneumococcal polysaccharide Vaccine) எனும் ஊக்குவிப்பு தடுப்பூசி ஒரு வருட இடைவெளியில் போடப்படும். அனைத்து முதியவர்களுக்கும் தனியாக தடுப்பூசி அட்டை வழங்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவர்.

முதியோர்

இந்தத் தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மூலம் வாங்கப்பட்டு, பொதுச் சுகாதாரத் துறையின் மூலம் முதியோர்களுக்குப் போடப்படும். இத்திட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட 104 முதியோர் இல்லங்களில் வசிக்கும் 4,133 முதியோர்கள் பயனடைவர்.