'ஞாபகமறதியைக் கட்டுப்படுத்தும் காபி கலவை!'- ஆய்வில் வெளியான தகவல் | Coffee controls memory loss and parkinson!

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (13/12/2018)

கடைசி தொடர்பு:08:37 (14/12/2018)

'ஞாபகமறதியைக் கட்டுப்படுத்தும் காபி கலவை!'- ஆய்வில் வெளியான தகவல்

காபி குடிப்பதால் பார்கின்சன், ஞாபகமறதி பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம் என ஆய்வில்  தெரியவந்துள்ளது. 

 

காபி கலவை

இன்றைய மருத்துவ உலகில், குணப்படுத்த முடியாத மூளை தொடர்பான பிரச்னைகளாக இருப்பது 'பார்கின்சன் '(Parkinson) மற்றும் ஞாபகமறதி நோய் பாதிப்புகள்தான். இதற்குரிய சிகிச்சை, தடுப்பு முறைகள் குறித்தும் ஆய்வுகள் நடந்துவருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட  ஓர் ஆய்வில்,  காபியிலுள்ள இரண்டு முக்கியக் கலவைகள், வயது முதிர்வால் நரம்பில் ஏற்படும் பார்கின்சன் நோயையும், லிவி எனப்படும் ஞாபகமறதி நோய் பாதிப்பையும் (Lewy body dementia) கட்டுப்படுத்தும் என்று  தெரிவிக்கிறது. ஞாபகமறதியில் அல்ஸைமருக்கு அடுத்த இடத்தில் உள்ளது, இந்த லிவி வகை மறதியாகும்.

அமெரிக்காவின் ரட்ஜெர்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் எலிகளை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், காபியிலிருக்கும் கஃபைன் மற்றும் இ.ஹெச்.டி கலவைதான், மூளை தொடர்பான பிரச்னைகளைக் கட்டுப்படுத்துகிறது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தக் கலவை கொண்ட காபியை உட்கொண்ட எலிகளின் மூளையில், அசாதாரணமான ஒரு புரதத்தின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டது.

காபி கலவை


அந்த புரதப்  பிரச்னைகளிலிருந்து எலிகள் பாதுகாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  அந்தப் புரதம்தான் பார்கின்சன் மற்றும் லிவி வகை ஞாபகமறதியை  ஏற்படுத்துவதாகும். இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் மாரல் மௌரடியன் கூறுகையில், "காபியிலுள்ள இ.ஹெச்.டி. என்ற பொருள், எல்லா வகை காபியிலும் ஒரே அளவில் இருப்பதில்லை. அளவுக்கு அதிகமாகக்கூட இருக்கும். ஒருவேளை அதிகமாக இருந்தால், சம்பந்தப்பட்ட நோயாளிகள்  எதிர்மறையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எனவே, சரியான கலவை அளவு என்ன என்பது குறித்து ஆராய்ந்துவருகிறோம்" என்றார்.

மூளை தொடர்பான இதுபோன்ற குணப்படுத்தமுடியாத பிரச்னைகளுக்கு, வருங்காலத்தில் தீர்வு கிடைக்கும் என நம்புவோம்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க