லேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை? - விளக்கும் ஆய்வு | why choose labels in food products?

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (18/12/2018)

கடைசி தொடர்பு:21:20 (18/12/2018)

லேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை? - விளக்கும் ஆய்வு

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஸ்நாக் வகைகளை உட்கொள்பவர்களுக்கு 13 சதவிகிதம் அதிலுள்ள சத்துகள் குறைவாகக் கிடைத்துள்ளது.

`தப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை அப்படியே வாங்கிவிடக் கூடாது. அதன் லேபிள்களைப் பார்த்து, அதன் ஊட்டச்சத்து அளவுகளைத் தெரிந்துகொண்டு, அவை அனைத்தும் சரியாக இருந்தால்தான் அவற்றை வாங்க வேண்டும்' என்ற விழிப்புஉணர்வு, பலரையும் ஆரோக்கியமாக்கியுள்ளது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

லேபிள்

எத்தனை பேர் லேபிளைப் பார்த்து பொருள்களை வாங்குகின்றனர், அவர்களில் எத்தனை பேர் ஹெல்த் கான்ஷியஸாக உள்ளனர் என்பதை ஆதாரபூர்வமாகக் கண்டறிய நியூயார்க்கின் `டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம்’ (Tufts University) ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

அந்த ஆய்வின் முடிவில், குறைவான சோடியம் (Low-Sodium) மற்றும் கொழுப்புச்சத்து இல்லாத (Fat-Free), கலோரி குறைந்த உணவை மக்கள் தேடித்தேடி வாங்குவது தெரியவந்துள்ளது. இந்தக் கவனம் ஒவ்வொருவரின் உடல்நிலையிலும், அந்தந்த சத்துகளை (சோடியம், கொழுப்பு, கலோரி) குறிப்பிட்ட சதவிகிதம் குறைத்துக்கொள்ள உதவியிருப்பது ஆய்வின் முடிவில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. புள்ளிவிவரப்படி கலோரி அளவு 6.6 சதவிகிதமும், கெட்ட கொழுப்பின் அளவு 10.6 சதவிகிதமும் குறைந்திருக்கிறது. அதேபோல் உடலுக்குத் தீங்குவிளைவிக்கும் ஸ்நாக் வகைகளை உட்கொள்பவர்களுக்கு 13 சதவிகிதம் அதிலுள்ள சத்துகள் குறைவாகக் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், லேபிளில் அளவைப் பார்த்தவர்களில் பெரும்பாலானோர், காய்கறிகளை வாங்குவதில் கவனம் செலுத்துகிறார்களாம். அதனால், காய்கறிகளை அதிகம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் 13.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஊட்டச்சத்து அளவுகள்

அதேநேரம் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுப்பொருள்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகள், நிறைவுற்ற கொழுப்புள்ள உணவுகள் (Saturated Fat), பழங்கள், முழு தானிய உணவுகள் போன்றவற்றில் இன்னமும் கவனமின்மை நீடிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு குறித்து பல்கலைக்கழக டீன், டௌரிஷ் மொசஃபைரியன் (Dariush Mozaffarian) கூறும்போது, ``உணவுப்பொருள் தயாரிப்பதன் கொள்கைகள் (Food Policies) மற்றும் லேபிள் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கிறது.

 

 லேபிள்

ஆனால், இவை நுகர்வோரின் பொருள் தேர்வுக்காகச் சொல்லப்படுவதா அல்லது தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்திமுறையை (Formulations) சொல்வற்காகவா என்பது தெளிவாகத் தெரியவில்லை" எனக் கூறியுள்ளார். தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தியில் எந்தளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆய்வாளர்கள் பரிசோதித்துள்ளனர். அதன் முடிவில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் டிரான்ஸ்ஃபேட் உபயோகம் 64.3 சதவிகிதமும், சோடியம் உபயோகம் 8.9 சதகிதமும் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க