இன்று புராணகால நண்பர்கள் தினம் - குருவாயூரில் குசேலர் தினக் கொண்டாட்டம் | Kuchela Dinam celebration at Guruvayur temple today

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (19/12/2018)

கடைசி தொடர்பு:14:55 (19/12/2018)

இன்று புராணகால நண்பர்கள் தினம் - குருவாயூரில் குசேலர் தினக் கொண்டாட்டம்

ன்று குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் குசேலர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

குசேலர்

குசேலர் அதிதியாகச் சென்று பகவானை தரிசனம் செய்து பயன்பெற்ற நாள் என்பதால் திதி கணக்கின்றி மார்கழி மாதத்தின் முதல் புதன்கிழமை இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. 

குசேலரும் கிருஷ்ணனும் ஒரே குருகுலத்தில் பயின்ற தோழர்கள். கிருஷ்ணன் மதுராவின் அரசன். குசேலனோ 27 குழந்தைகளோடு வறுமையில் வாடினார். தங்கள் குடும்பத்தின் வறுமை நீங்க என்ன வழி என்று யோசித்த குசேலரின் மனைவிக்கு, தன் கணவரின் பால்ய சிநேகிதரும், துவாரகை மன்னருமான பகவான் கிருஷ்ணரின் நினைவு வந்தது. பகவானை நோக்கி நம்மை வழிப்படுத்துவது குருநாதராக இருப்பார். இங்கே குசேலரின் மனைவி அவரை துவாரகை கண்ணனிடம் அவர் கடவுள் என்று அறியாமலே ஆற்றுப்படுத்தினார். மேலும் கண்ணனுக்குக் கொடுக்க சிறிது அவலையும் ஒரு துணியில் முடிந்து கொடுத்தார்.

குருவாயூர் கோயில்

குசேலரின் வரவு கண்ட கண்ணன், மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று, வேண்டிய உபசாரங்கள் செய்து மகிழ்ந்தார். உலகுக்கெல்லாம் படியளக்கும் இறைவன் தன் நண்பனிடம், 'எனக்கு என்ன கொண்டு வந்தாய்?' என்று கேட்டார். நாணத்தோடு கொண்டு வந்த அவலைக் குசேலர் மறைக்க அதைப் பிடுங்கி உண்டான் அந்த மாயவன். அந்தக் கணத்தில் குசேலரின் வறுமை நீங்கி எல்லாச் செல்வங்களும் சென்று சேர்ந்தது என்பது புராணக் கதை. நட்புக்குப் பகவானே முக்கியத்துவம் தந்து சிறப்பித்த இந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, மார்கழி மாதத்தின் முதல் புதன்கிழமை குருவாயூர் ஆலயத்தில் 'குசேலர் தினம்' கொண்டாடப்படுகிறது. 

கிருஷ்ணர்

இன்று துவாதசி திதி. துவாதசி அன்று பகவானுக்கு எளிமையான உணவான நெல்லிக் கனி, அகத்திக்கீரை ஆகியன படைத்து வழிபடுவது வழக்கம். அதோடு இன்று குசேலர் இறைவனுக்குப் படைத்த அவலை நெய்யோடும் வெல்லத்தோடும் படைத்து வழிபட வறுமை நீங்கி செல்வச் செழிப்பு கிட்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க