வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (21/12/2018)

கடைசி தொடர்பு:19:52 (21/12/2018)

டயட், ஜிம்லாம் அப்புறம்... முதலில் இந்த ஹார்மோன் அறிவியல் தெரிஞ்சுக்குங்க!

குறைவாகவோ அல்லது அதிகமாகவோ அனைவரின் உடலிலும் கொழுப்பு இருக்கும்.

டயட், ஜிம்லாம் அப்புறம்... முதலில் இந்த ஹார்மோன் அறிவியல் தெரிஞ்சுக்குங்க!

வாய் ருசியும், வயிற்றுப்பசியும் அதிகமானால் அதற்குக் கிடைக்கும் தண்டனை உடல் பருமன். இயற்கையின் படைப்பில் இப்படி ஓர் அழகா எனக் கண்ணாடியைப் பார்த்து வியப்பவர்களிடம், என்ன எடை கொஞ்சம் கூடிவிட்டீர்கள் என்று கேட்டுவிட்டால் போதும்;  அப்போதே ஆரம்பத்துவிடும் அவர்களின் பிட்னஸ் பரிதாபங்கள். முதலில் டயட் என்ற பெயரில் இவர்கள் பூட்டுப்போடுவது வயிற்றுக்குத்தான். இப்படிச் செய்வதால் உங்கள் உடல் எடையைகுறைத்து விட முடியுமா? அப்படி என்றால் எப்படி உடல் எடையைக் குறைப்பது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்? உணவுப் பழக்கவழக்கம், மன அழுத்தம் இவற்றைத் தாண்டி உடல் எடைக்கு மற்றகாரணங்களும் உண்டு. அவைதான் ஹார்மோன்கள். குறிப்பாக ஆண் பெண் பாகுபாடு அறிய உதவும் செக்ஸ் ஹார்மோன்கள்.

உங்களின் உடல் எடையைக் குறைக்கவேண்டுமென்றால் ஹார்மோன்களை மாற்ற வேண்டும். உடலில் கொழுப்பைச் சேமிப்பதில் டெஸ்டோஸ்டீரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகிய இரண்டும் முக்கிய பங்காற்றுகின்றன. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரானும், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜனும் வித்தியாசமான வடிவங்களைத் தருவதில் முக்கியமான பங்களிக்கின்றன. இயற்கையாகவே     வயதாகும்போது டெஸ்டோஸ்டீரானின் அளவுகுறையத் தொடங்கும். இதனால் ஆண்களுக்குக் கொழுப்பு முழுவதும் வயிற்றில் சேர்ந்து Pot belly போன்ற வடிவமைப்பு உருவாகிவிடுகிறது. இந்தத் தொப்பையிலுள்ள வயிற்றுக் கொழுப்பினால் வளர்சிதைமாற்ற பிரச்னைகள் அதிகரிக்கும். இவை இதய அமைப்பிற்கு எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களோடு ஒப்பிடும்போது ஆண்களுக்கு இதய நோய்கள் அதிகமாக வருவதற்கு இதுவும் ஒரு காரணம். அப்படியென்றால் இந்த ஹார்மோன்களால் உடல் எடையில் எப்பொழுது, எப்படியெல்லாம் மாற்றம் வரும் என்று உங்களுக்குக் கேள்வி எழலாம்?    

குரோமோசோம்கள்

பொதுவாகவே ஆணோ பெண்ணோ பருவம் அடையும்போதுதான் உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்படும். அதாவது ஹார்மோன்கள் உயர்நிலையை அடையும் பொழுதே இந்த மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். இந்த ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன்கள் உடல் மாற்றங்களுக்கு மட்டுமல்லாமல் இரண்டாவது செக்ஸ் பண்புகளுக்கும் காரணமாகிறது. எப்படியெனில், பெண்களுக்கு பரந்தஇடுப்பும், மார்பகங்களும் உருவாகும்; ஆண்களுக்குத் திடீரென தசைகள் கூடும், குரல்கள் மாறும், Testicles முதிர்ச்சி அடையும். இருபிரிவினருக்கும் பொதுவாகவே முடிகள் வளரும், புதுவித உணர்வுகளான காதல், காமம் போன்ற உணர்ச்சிகளும் உண்டாகும். குறிப்பாக இந்த நேரத்தில் ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்குத் தொடை மற்றும் பிட்டத்திலும் தசையின் அளவு கூடும். இது எதனால் என்றால் உடலின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள அடிபோஸ் திசுக்கள், வெவ்வேறு ஹார்மோன் ஏற்பிகளை கொண்டிருக்கும். வயிற்றிலுள்ள கொழுப்பு, குறிப்பாக உள்ளுறுப்பு கொழுப்பு (Visceral fat) டெட்டோஸ்டீரான் ஏற்பிகளையும், தோலுக்கு அடியில் உள்ள கொழுப்பு (Subcutaneous fat) ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகளையும் கொண்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் டெட்டோஸ்டீரானை Visceral கொழுப்பும், ஈஸ்ட்ரோஜெனை Subcutaneous கொழுப்பும் உற்பத்தி செய்துசேகரிக்கின்றன. பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கு ஈஸ்ட்ரோஜன் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. எப்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைகிறதோ அப்போது பெண்களுக்கு மாதவிடாய் நிற்கிறது. உடலில் கொழுப்பு சதவீதம் அதிகம் உள்ள பெண்கள் விரைவில் பருவம் அடைகின்றனர். அதிகப்படியான கொழுப்புகள், அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்யும். இதேபோன்ற விஷயம்தான் திருநங்கைகளின் உடலிலும் நடைபெறுகிறது. எனவேதான் தங்களின் உடல் வடிவத்தினை மாற்றிக் கொள்வதற்காக 'ஹார்மோன் சிகிச்சை' செய்துகொள்கின்றனர். பெண்ணாக இருந்த ஒருவர் தன்னை மாற்றிக்கொள்வதற்காக டெட்டோஸ்டீரான் ஹார்மோன் சிகிச்சையும், பிறப்பில் ஆணாக இருந்தவர் பெண்ணாக மாறுவதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிகிச்சையும் எடுத்துக்கொள்கிறனர். இப்படித்தான் நமது செக்ஸ் ஸ்டீராய்டுகள் உடல் கொழுப்பில்ஆதிக்கம் செலுத்துகின்றன. இதைத்தவிர ஹார்மோன்களைக் குறைக்கும் காரணிகளும் உண்டு.  

ஹார்மோன் கொழுப்புகள்

1. சாதாரணமாகவே வயதாகும்போது படிப்படியாக நமது ஹார்மோன்களின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும்.

2. சில மருந்துகளால் செயற்கையாக டெஸ்டோஸ்டீரான் அளவைக் குறைக்கமுடியும் (androgen blocking medicines).

3. Hypogonadism-ல் பாதிக்கப்பட்ட ஆண்களுக்குக் குறைந்த அளவு டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியாகிறது.

4. பெண்களுக்கு, 'மெனோபாஸ்' ஏற்படும் போது ஈஸ்ட்ரோஜனின் அளவு குறையதொடங்கும். அச்சமயத்தில் பெண்கள் புதிய  அறிகுறிகளோடு கூடிய மாற்றத்தைஉணர்வர். ஹார்மோன் சமநிலையை அடைவதால் உடலில் இருக்கும் கொழுப்பு அனைத்தும் ஓரிடத்தில் சேரும்.

5. இதேபோல் Polycystic Ovary Syndrome உள்ளவர்களுக்கும் ஆண்ட்ரோஜன் அளவு அதிகரித்துக் கொழுப்பை வயிற்றில் சேர்க்கிறது.

6. இரண்டு X குரோமோசோமைப் பெற்றிருக்கும் பெண்களை ஒப்பிடும்போது, Turnersyndrome பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரே ஒரு x குரோமோசோமைக் கொண்டிருப்பதால் முற்றிலும் வித்தியாசமான உடலமைப்பை (கொழுப்பு விநியோகம்) பெற்றிருப்பர்.

7. Klinefelter syndrome - ஆல் பாதிக்கப்பட்ட ஆண்கள் XXY குரோமோசோம் அமைப்பு (கூடுதலாக ஒரு X குரோமோசோமைக் கொண்டிருப்பர்)   இதனால் உயிரியல் அடிப்படையில் பெண்களைப் போல தோற்றம் உடையவர்களாகக் காட்சியளிப்பர். ஹார்மோன்களை பாதிக்கும் நோய்களும் உடல் கொழுப்பை பாதிக்கும். குறைவாகவோ அல்லது அதிகமாகவோ அனைவரின் உடலிலும் கொழுப்பு இருக்கும். முடிந்த அளவு அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்வோம். மாற்ற முடியாதவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதே இயல்பு!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்