`பால்வினை பாதித்த கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம்' - மருத்துவர் எச்சரிக்கை! | awareness of sexually transmitted diseases in women

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (24/12/2018)

கடைசி தொடர்பு:20:15 (24/12/2018)

`பால்வினை பாதித்த கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம்' - மருத்துவர் எச்சரிக்கை!

``பால்வினை நோய் பாதித்த கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு'' என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   

பால்வினை நோய் குறித்து விளக்கம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், பால்வினை நோய் துறை சார்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். பால்வினை நோய் துறையின் இயக்குநரும், பேராசிரியருமான எஸ்.கலைவாணி பேசுகையில், “பால்வினை நோய்  சில பெண்களுக்குப் பரவும் கிருமித் தொற்று. இந்த நோய் பாதித்த பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும், இவர்கள்மூலம் கணவருக்கும் நோய் பரவும் அபாயம் அதிகம். 

மக்கள்

இந்த நோய் கர்ப்பிணிகளைப் பாதித்தால் கருச்சிதைவு, குறைப்பிரசவம், நோய் பாதிப்புகளுடன் குழந்தை பிறப்பு உள்ளிட்டவை நேரிடும். இந்நோய் பாதித்தவருக்கு  வெள்ளைப்படுதல், அடி வயிற்றில் வலி,  சிறுநீர் கழிக்கும்போதும் வலி, எரிச்சல், அதிகமாக ரத்தம் வெளியேறுதல் உள்ளிட்டவை இருக்கும். சிருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல்கூட இருக்கும். ரத்தப் பரிசோதனை, நுண்ணோக்கு பரிசோதனை மையங்களிலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பால்வினை நோயைக் கண்டறியும் வசதி உள்ளது. கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களுக்கும், அவர்களது கணவருக்கும் விடிஆர்எல் (VDRL) மற்றும் ஹெச்.ஐ.வி (HIV) பரிசோதனை இலவசமாகவே செய்கிறோம்.

மருத்துவர் கலைவாணி

இந்த நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டுமென்றால், திருமணத்துக்கு முன் தாம்பத்தியத்தைத் தவிர்க்க வேண்டும் .  9 வயது முதல் 26 வயது வரை உள்ள பெண்கள் 'ஹியூமன் பாப்பிலோமா' வைரஸ் நோய் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். இந்நோய் குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்றுத் தரலாம்’’ என்றார்.