உலக சித்த மருத்துவ தினம்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் களைகட்டும் விழாக்கள் | Exhibition organized for World Siddha day

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (26/12/2018)

கடைசி தொடர்பு:16:25 (26/12/2018)

உலக சித்த மருத்துவ தினம்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் களைகட்டும் விழாக்கள்

கத்தியர் பிறந்த மார்கழி மாதத்தில் ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளில், `உலக சித்த மருத்துவ தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்று மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் கடந்த ஆண்டு முடிவெடுத்தது.

அதன்படி முதல்முறையாகக் கடந்த ஆண்டு சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. இன்று இரண்டாவது ஆண்டாக இந்த விழா கொண்டாடப்படுகிறது.

சித்த மருத்துவ தினம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு சித்த மருத்துவமனைகள் மற்றும் சித்த மருத்துவமனைகள் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் விழாவைக் கொண்டாடுமாறு அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று நடைபெறும் உலக சித்த மருத்துவ தின விழாவில், மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத

 சித்த மருத்துவ தினம்யோசே நாயக், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பலர் கலந்துகொள்வதாக, மத்திய சித்த ஆராய்ச்சிக் கவுன்சில் தலைவர் டாக்டர் கனகவள்ளி தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலையில் தொடங்கிய இந்த விழா மாலை வரை நடைபெறவுள்ளது. விழாவில் சித்த மருத்துவத்தின் மகத்துவம் பற்றி பலர் பேசுகின்றனர்.

ஒரு வார காலம் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் சித்த மருத்துவ முகாம்கள், கண்காட்சிகள், கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. மக்கள் கூடும் இடங்களில் அஞ்சறைப்பெட்டியின் மகத்துவம் குறித்து விளக்கப்படுகிறது.

பொதுமக்களுக்குக் கட்டுரைப் போட்டிகள், ஓவியப் போட்டிகள், மாடித்தோட்டம் குறித்த விழிப்புஉணர்வு எனப் பல்வேறுவிதமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, மலைவாழ் மக்களிடையே சித்த மருத்துவத்தைக் கொண்டு செல்லும்விதமாக, பாரம்பர்ய மருத்துவர்களை அவர்களது வாழ்விடங்களுக்கு அழைத்துச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க