இனி ரத்த மாதிரி வேண்டாம்! - ரத்த சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ள புதிய கண்டுபிடிப்பு | There is no need to drop a blood anymore for Diabetic test

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (27/12/2018)

கடைசி தொடர்பு:16:05 (27/12/2018)

இனி ரத்த மாதிரி வேண்டாம்! - ரத்த சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ள புதிய கண்டுபிடிப்பு

த்த சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ள, இனி ரத்த மாதிரிகள் தேவையில்லையாம். நாவில் ஊறும் எச்சிலைக் கொண்டே ரத்த சர்க்கரை அளவைக் கண்டறிந்துவிடலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். சவுதி அரேபியாவைச் சேர்ந்த கிங் அப்துல்லா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்வுக்கு வரவேற்பு பெருகிவருகிறது.

குளுக்கோமீட்டர் பரிசோதனை - சர்க்கரை நோய்

சர்க்கரை நோயாளிகள், தங்களின் ரத்த சர்க்கரை அளவை வீட்டிலேயே பரிசோதனை செய்துகொள்ள பயன்படுத்தும் கருவி, குளூக்கோமீட்டர். இந்தக் கருவியை வாங்கும்போது, அதனுடன் சேர்த்து, சில ஊசிகளும் தரப்படும். அவற்றின்மூலம், விரல்களில் லேசாகக் குத்தி சில சொட்டு ரத்தத்தை எடுக்க வேண்டும். பேப்பர் ஸ்ட்ராப்ஸின் உதவியுடன், ரத்த மாதிரியைக் கருவிக்குள் செலுத்தினால், சில நிமிடங்களில் ரத்த சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இப்போது கண்டறியப்பட்டுள்ள டெக்னாலஜியில், ஊசிக்குப் பதிலாக பி.ஹெச் சென்சிட்டிவ் பேப்பர் பயன்படுத்தப்படுகிறது. இந்த சென்சிட்டிவ் பேப்பர், `இன்க்ஜெட்' (Inkjet) என்ற டெக்னாலஜி மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

சென்சிட்டிவ் பேப்பரை லேசாக `கோட்' செய்து பளபளப்பாக்கி (Glossy Paper Sheets) அதன்மீது `நுண்ணிய எலெக்ட்ரோட்' (microscale electrode) தடவப்படும். இவை அனைத்தின் மீதும், குளூக்கோஸ் ஆக்ஸிடேஸ் என்ற நொதி (Enzyme) தடவப்பட்டிருக்கும். எச்சில் மாதிரிகள் இவற்றின் மீது பட்டதும், அவை அனைத்தும் சேர்ந்து வேதி வினையாற்றத் தொடங்கிவிடும். அப்படி வினையாற்றும்போது, ரத்த சர்க்கரை அளவை எளிமையாகக் கண்டறியலாம். இந்தக் குளூக்கோஸ் ஆக்ஸிடேஸ் நொதி, மற்ற நொதிகளைக்காட்டிலும் அதிக நாள் அப்படியே நிலைத்திருப்பதாகக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். எனவே, மற்ற அனைத்துப் பரிசோதனைகளைக்காட்டிலும், இது சிறந்ததாக இருக்கும் என்கிறார்கள் அவர்கள். 

சர்க்கரை நோய்

எச்சிலை மாதிரியாக எடுத்துக்கொண்டு, அந்தப் பேப்பரில் வைத்து, அதைக் கருவிக்குள் செலுத்த வேண்டும். பொதுவாக, பி.ஹெச் பேப்பர் வகைகள் அனைத்தும் திரவங்களில் அதன் தன்மையைக் கண்டறியத்தான் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, ஒரு திரவம் அமிலத்தன்மை நிறைந்ததா, காரத்தன்மை நிறைந்ததா என்பதைக் கண்டறிய அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கண்டுபிடிப்புகள், அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை என்பதைத்தாண்டி, நோய்களைக் கண்டறியவும் (Disease Biomarkers) இது உதவும். இந்தக் கருவியை மிக எளிமையாக, குறைவான நேரத்தில் அதிகளவில் தயாரிக்கலாம் என ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க