`க்ரில் கோழி வேண்டாம்; `கடக்நாத்' கோழி சாப்பிடுங்கள்’ - விராட் கோலிக்கு வந்த ஸ்பெஷல் ரெக்வைஸ்ட்! | A ‘kadak’ chicken diet tip for Virat Kohli and Team India by veterinary scientists from madhya pradesh

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (03/01/2019)

கடைசி தொடர்பு:19:12 (03/01/2019)

`க்ரில் கோழி வேண்டாம்; `கடக்நாத்' கோழி சாப்பிடுங்கள்’ - விராட் கோலிக்கு வந்த ஸ்பெஷல் ரெக்வைஸ்ட்!

த்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த கால்நடை ஆராய்ச்சியாளர்கள் சிலர், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குப் புதிதாக ஓர் ஊட்டச்சத்து உணவைப் பரிந்துரைத்துள்ளனர்.  விளையாட்டு வீரர்கள், தங்களின் தசை வலிமைக்கும் உடலில் கொழுப்புச்சத்தைக் குறைக்கவும், நிறைய பயிற்சிகள் எடுப்பதுண்டு. அந்த வகையில், பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களின் டயட் பட்டியலில் ஏதோவொரு விதத்தில் கோழிக்கறி நிச்சயம் இடம்பெறும். 

விராட் கோலி

மத்தியப்பிரதேச கால்நடை ஆராய்ச்சியாளர்கள், விராட் கோலிக்கும் பிசிசிஐ-க்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், ``ஊடகங்கள் மூலம் விராட் கோலி போன்ற சில விளையாட்டு வீரர்களின் டயட் லிஸ்ட்டை நாங்கள் அறிந்துகொண்டோம். அவற்றைப் பார்க்கும்போது, பெரும்பாலானோருக்கு கோழி வகை உணவுகளின்மீது ஈர்ப்பு இருப்பது தெரிகிறது.

ஆனால், அவற்றில் கெட்ட கொழுப்பு அதிகமிருப்பதால், அவற்றை வலுக்கட்டாயமாகத் தவிர்த்துவிட்டு, பலரும் 'வீகன்' டயட்டுக்கு தங்களை மாற்றிக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. எங்களது `கிரிஷி விக்யன் கேந்திர ஜபுவா' (Krishi Vigyan Kendra Jhabua) சார்பாக, இதற்கு ஒரு தீர்வைக் கண்டறிந்துள்ளோம். 

கிரிக்கெட்

அதாவது, எங்கள் பகுதியில் இருக்கும் `கடக்நாத்' கோழியில் கொழுப்புச்சத்தும் கொலஸ்ட்ராலும் மிகக்குறைவாகவே உள்ளது. அதுமட்டுமின்றி, அவற்றில் புரதமும் இரும்புச்சத்தும் மற்றவற்றைக்காட்டிலும் அதிகமாக உள்ளது. ஹைதராபாத்தில், தேசிய ஆராய்ச்சி மையம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, சிக்கன் பிரியர்களாக உள்ள விளையாட்டு வீரர்கள் அனைவரும், டயட்டைக் காரணம் காட்டி கோழி உணவுகளைத் தவிர்க்க வேண்டாம். `கடக்நாத்' வகைக் கோழியைத் தாராளமாகச் சாப்பிடலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

கோழி கறி

கறுப்பு நிறத்தில் காணப்படும் இந்தக் கோழியில், மற்ற கோழிகளைக் காட்டிலும் அதிக இரும்புச்சத்து இருக்கிறது. இதன் உடல் மற்றும் ரத்தம், இரண்டுமே கறுப்பு நிறத்தில்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண கோழிகளில், 18 சதவிகிதம் புரதம் இருக்கும். ஆனால், கடக்நாத் கோழியில் 21 முதல் 24 சதவிகிதம் இருக்கும். சாதாரண கோழியில், 25 சதவிகிதம் கொழுப்புச்சத்து இருக்கிறது என்றால், இதில் 1.94 முதல் 2.6 சதவிகிதம் கொழுப்புச்சத்தே உள்ளது. 100 கிராம் சாதாரண கோழியில், 218 மி.கி கொலஸ்ட்ரால் இருக்கும். ஆனால், கடக்நாத் வகையில், 59 மி.கி தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க