செல்போன் பயன்படுத்துவதால் யாருக்கு அதிக பாதிப்பு!- ஆய்வில் அதிர்ச்சி | net addicts will get more health issues

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (04/01/2019)

கடைசி தொடர்பு:15:20 (04/01/2019)

செல்போன் பயன்படுத்துவதால் யாருக்கு அதிக பாதிப்பு!- ஆய்வில் அதிர்ச்சி

டீன்ஏஜ் பெண்கள் சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவதால், தங்கள் வயதில் உள்ள ஆண்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக மனஅழுத்தத்துக்கு உள்ளாவதாக இங்கிலாந்திலுள்ள லண்டன் பல்கலைக்கழக (University College of London) ஆய்வில் தெரியவந்துள்ளது. இகிளினிக்கல் மெடிசின் (EClinical Medicine) என்ற தளத்தில் இந்த முடிவு வெளியாகியுள்ளது. 

இணையப் பயன்பாடு

டீன்ஏஜ் பருவத்தினர்தான் இணையதளத்தை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதன்காரணமாக தூக்கமின்மை (Disturbed Sleep), துன்புறுத்தல்கள் (Online Harassment), உடல் சார்ந்த குறைவான மதிப்பீடு, தன்னம்பிக்கை குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஏறத்தாழ 11 ஆயிரம் இளைஞர்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 14 வயதுப் பெண்குழந்தைகள்தாம் அளவுக்கதிகமாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அதிலும், ஐந்தில் ஒரு டீன்ஏஜ் பெண் ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் 3 மணி நேரமாவது ஆன்லைனில் செலவிடுகின்றனராம். சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவதால் 40 சதவிகித டீன்ஏஜ் பெண்களும், 25 சதவிகித டீன்ஏஜ் ஆண்களும் துன்புறுத்தல் மற்றும் மிரட்டலுக்கு உள்ளாவது அந்த ஆய்வுமுடிவில் தெரியவந்துள்ளது. தூக்கமின்மையைப் பொறுத்தவரையில் 40 சதவிகித டீன்ஏஜ் பெண்களும், 28 சதவிகித டீன்ஏஜ் ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர். 

செல்போன்

தன்னம்பிக்கை, உடல் சார்ந்த சுய மதிப்பீடு போன்ற அனைத்திலும் இதே நிலைதான். டீன்ஏஜ் ஆண்களைக்காட்டிலும், அந்தப் பருவத்திலுள்ள பெண்களே அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான கெல்லி, இந்த முடிவு குறித்து பேசும்போது, ``ஒரு டீன்ஏஜ் குழந்தை, ஒருநாளில் எத்தனை மணிநேரம் செல்போன் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்து, மனஅழுத்தத்தின் வீரியம் அதிகரிக்கும்.

மன அழுத்தம்

 

பெற்றோர் நினைத்தால், இந்தப் பிரச்னையிலிருந்து தங்கள் குழந்தைகளை மீட்கலாம். அதற்கு அவர்கள், உடனடியாக பிள்ளைகள் மீதான தங்களின் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவது எப்படி, ஒருநாளில் எத்தனை மணி நேரம் செல்போன் பயன்படுத்தலாம் என்பதுகுறித்து அறிவுரைகள் தந்து, தங்கள் பிள்ளைகளை நெறிப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க