உங்கள் உடலே சர்க்கரை நோயைக் குணமாக்கலாம்! - ஆச்சர்யமூட்டும் ஆய்வு முடிவு | your body may able to cure diabetes

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (09/01/2019)

கடைசி தொடர்பு:15:09 (10/01/2019)

உங்கள் உடலே சர்க்கரை நோயைக் குணமாக்கலாம்! - ஆச்சர்யமூட்டும் ஆய்வு முடிவு

ர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி ஒன்றை நார்வே நாட்டைச் சேர்ந்த பெர்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். மருந்து, மாத்திரை எதுவும் இல்லாமல் நமது உடலே சர்க்கரை நோய்க்கான தீர்வாக மாற வாய்ப்புள்ளது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரை

ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிக்கும் இன்சுலின் எனும் ஹார்மோனை உற்பத்தி செய்யக்கூடிய செல்கள் சேதமடைவது அல்லது அந்த செல்களின் எண்ணிக்கை குறைவதைத்தான் சர்க்கரை நோய் என்கிறோம். எனவே, பல சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கின்றனர். 

கணையத்தில் `குளுக்கோகான்' என்ற ஹார்மோனை உற்பத்தி செய்யும் செல்கள் தங்களது அடையாளத்தை மாற்றிக்கொண்டு இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்களாக செயல்புரிவது நார்வே ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கணையத்தில் உள்ள இரண்டு சதவிகித செல்களால் மட்டுமே இதுபோன்று செயலாற்ற முடியும் என்பது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, ``இந்த ஆராய்ச்சியின் மூலம் சர்க்கரை நோய்க்கான சிகிச்சையில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. `குளுக்கோகான்' ஹார்மோனை உற்பத்தி செய்யும் செல்களைத் தூண்டுவதன்மூலம் அவற்றால் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியும். குறைந்த அளவிலான செல்கள்தான் இந்தப் பணியைச் செய்கின்றன என்றாலும், அதை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. 

மேலும், எங்கள் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக செல்களின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் குறிப்பிட்ட மருந்தைச் செலுத்தி ` `குளுக்கோகான்' ஹார்மோனை உற்பத்தி செய்யும் செல்களின் எண்ணிக்கையை ஐந்து சதவிகிதமாக அதிகரித்துள்ளோம். அதனால் கணையத்தில் இன்சுலின் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும்" என்றனர்.