பிரசவத்தின்போது கீழே திரும்பாத பாப்பாவின் தலையை கைகளால் திருப்ப முடியுமா? 'வைரல்' வீடியோ குறித்து மருத்துவர் விளக்கம் | Can External Cephalic Version improve the chance of having a vaginal birth?

வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (09/01/2019)

கடைசி தொடர்பு:20:00 (09/01/2019)

பிரசவத்தின்போது கீழே திரும்பாத பாப்பாவின் தலையை கைகளால் திருப்ப முடியுமா? 'வைரல்' வீடியோ குறித்து மருத்துவர் விளக்கம்

''வயிற்றில் இருக்கிற சிசுவின் தலை தாயின் ஜனன உறுப்பை நோக்கித் திரும்பாமல் இருந்தால், இந்தச் சிகிச்சையை செய்வோம். இதை கருவுற்ற 32-வது வாரத்தில் இருந்து 34-வது வாரங்களுக்குள் செய்யலாம்.''

பிரசவத்தின்போது கீழே திரும்பாத பாப்பாவின் தலையை கைகளால் திருப்ப முடியுமா? 'வைரல்' வீடியோ குறித்து மருத்துவர் விளக்கம்

சில நாள்களாகச் சமூக வலைதளங்களில், பிரசவ நேரத்தில், தாய்க்கு வலி வந்தபிறகும், தலை கீழ் நோக்கித் திரும்பாமல் இருக்கிற சிசுவை, மருத்துவர்கள் கைகளாலேயே மெள்ள மெள்ள நகர்த்தி தலையை கீழே கொண்டு வருகிற வீடியோக்கள் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சிகிச்சையின் பெயர் என்ன, இதன் மூலம் எத்தனை சதவிகிதப் பெண்களுக்கு சுகப் பிரசவம் செய்ய முடியும் என்று மகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தரிடம் கேட்டோம். 

கர்ப்பிணி

``இந்தச் சிகிச்சையின் பெயர் எக்ஸ்டர்னல் சிபாலிக் வெர்ஷன் (External Cephalic version). பிரசவ வலி வந்தும்கூட வயிற்றில் இருக்கிற சிசுவின் தலை தாயின் ஜனன உறுப்பை நோக்கித் திரும்பாமல் இருந்தால், இந்தச் சிகிச்சையை செய்வோம். இதைக் கருவுற்ற 32-வது  வாரத்திலிருந்து 34-வது வாரங்களுக்குள் செய்யலாம். மருத்துவர்ஆனால், இந்தச் சிகிச்சையை செய்வதற்குச் சம்பந்தப்பட்ட தாய் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.  

* அவருக்கு கர்ப்ப காலத்தில் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு பிரச்னைகள் வந்திருக்கக் கூடாது. 

* திருமணமாகி பத்து வருடங்கள் கழித்து, சிகிச்சைகள் பல எடுத்து அதன் பிறகு பிள்ளைப் பெற்ற பெண்களுக்கு இந்த முறையில் சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்ய முடியாது.

* நஞ்சு கீழே இருந்தாலும் சிசுவின் கழுத்தை கொடி சுற்றியிருந்தாலும் எக்ஸ்டர்னல் சிபாலிக் வெர்ஷனை செய்ய முடியாது. 

* தாய் உடல் பருமனாக இருந்தாலும், இந்த முறையில் அவருக்குச் சுகப்பிரசவம் செய்ய முடியாது. 

* கருவில் இருக்கிற சிசுவின் எடை இரண்டரை கிலோவுக்குள் இருக்க வேண்டும்.     

* குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குடத் தண்ணீர், 32-34 வாரங்களில் இருக்க வேண்டிய அளவில் இருப்பது முக்கியம். அப்படியிருந்தால்தான் சிசுவைத் திருப்ப முடியும். மெள்ள மெள்ளச் சிசுவின் தலையை ஜனனப் பாதையை நோக்கித் திருப்பி, வயிற்றில் துணி வைத்து இறுக்கமில்லாமல் கட்டி, கர்ப்பிணியைப் படுக்க வைத்துவிட்டுக் காத்திருப்போம். வயிற்றில் கட்டிய துணி, மறுபடியும்  சிசு தலையை மேலே கொண்டு போவதைத் தடுக்கும். இந்தச் சிகிச்சையைச் செய்யும் அதே நேரத்தில் சிசுவின் இதயத் துடிப்பையும் பரிசோதித்துக்கொண்டே இருக்க வேண்டும். குழந்தையின் மூவ்மென்ட்ஸ் நார்மலாக இருக்க வேண்டும். இந்தச் சிகிச்சை செய்யும்போது, ஒருவேளை குழந்தையின் இதயத்துடிப்பு கூடுகிறது என்றால், குழந்தையைக் காப்பாற்றுவதற்காக உடனே சிசேரியன் செய்து விடுவோம்.

கருப்பை

இத்தனை கவனம் எடுத்து சிசுவைத் திருப்பினாலும், சிசுவின் தலை அம்மாவின் இடுப்பு எலும்புகளுக்குள் நுழைந்து வெளியே வர வேண்டும். குழந்தையின் தலை அம்மாவின் இடுப்பெலும்புகளின் இடைவெளியைவிடச் சற்று பெரிதாக இருந்தால் எக்ஸ்டர்னல் சிபாலிக் வெர்ஷன் செய்ய முடியாது. மகப்பேறு மருத்துவர்கள் இத்தனை விஷயங்களையும் யோசித்துத்தான் சிசேரியன் அவசியமா என்பதை முடிவு செய்கிறோம்'' என்றவர், சுகப் பிரசவமாக, மருத்துவர்கள் வேறு என்னென்ன வழிமுறைகளைக் கையாளுவார்கள் என்பதையும் சொன்னார்.  

``கர்ப்பப் பையின் வாயைத் திறப்பதற்கு, ஆயின்மென்ட் இருக்கிறது. 8 மணி நேரத்துக்கு முன்னாடியே அதை அப்ளை செய்துவிட்டால், சுகப்பிரசவம் நடக்க அதிகமான வாய்ப்பிருக்கிறது. அப்படியும் நடக்கவில்லை என்றால் ட்ரிப்ஸ் போடுவோம். நேரம் கடந்தால், தாய்க்கும் சேய்க்கும் பிரச்னை என்று தெரிந்தால் மட்டுமே, சிசேரியன் என்று முடிவெடுப்போம்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்