தமிழகம் முழுவதும் பிப்ரவரி 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம் - அரசு அறிவிப்பு | Tamilnadu pulse polio camp on February 3

வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (11/01/2019)

கடைசி தொடர்பு:17:18 (11/01/2019)

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம் - அரசு அறிவிப்பு

இந்த முகாமின் மூலம் 70 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மிழக அரசின் சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இரண்டு தவணையாகப் போலியோ சொட்டு மருந்து கொடுப்பது வழக்கம். இந்த வருடம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி ஒரே தவணையாக முகாம் நடைபெறவிருக்கிறது.

போலியோ

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பேருந்து, ரயில், விமான நிலையங்களில் முகாம்கள் நடைபெறும். இதுதவிர, மக்கள் அதிகம் கூடும் பொருள்காட்சி போன்ற இடங்களிலும், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படும். மலைப்பிரதேசங்கள், எளிதில் வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுவின் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும். 40,000-க்கும் மேற்பட்ட முகாம்கள், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் முகாம் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

``இந்த முகாமின் மூலம் 70 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முகாம் தினத்தன்று விடுபட்ட குழந்தைகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். 

போலியோ சொட்டு மருந்து முகாம்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்ததால் தமிழகத்தில் கடந்த 15 வருடங்களாகப் போலியோ பாதிப்பு இல்லை. அரசின் தொடர்ச்சியான செயல்பாடுகளால் இந்தியாவை போலி இல்லாத நாடு என்று உலகச் சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் போலியோ தடுப்புக்கான சொட்டு மருந்துகள் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.