குளிர்காலத்தில் வறண்ட உதடுகளுக்கு குட் பை சொல்லலாமே! #BeautyTips | Say good-bye to your dry lips with these simple tips

வெளியிடப்பட்ட நேரம்: 19:29 (17/01/2019)

கடைசி தொடர்பு:19:29 (17/01/2019)

குளிர்காலத்தில் வறண்ட உதடுகளுக்கு குட் பை சொல்லலாமே! #BeautyTips

பிங்க் நிற ரோஸ் இதழ்களை ஒரு நாள் இரவு முழுவதும் தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதை உதட்டின் மேல் தடவிக் கொண்டு மெதுவாக மசாஜ் போன்று செய்ய வேண்டும். அந்தக் கலவை வாயினுள் போனாலும் எந்தப் பிரச்னையும் கிடையாது.

குளிர்காலத்தில் வறண்ட உதடுகளுக்கு குட் பை சொல்லலாமே! #BeautyTips

குளிர்காலத்தில் நம்முடைய சருமம் வறண்டு காணப்படும். காரணம்... உடலிலுள்ள நீரின் அளவு குறைவது. குறிப்பாக உதடுகள் வறண்டு போக ஆரம்பிக்கும். அதைச் சரிசெய்ய டிப்ஸ் தருகிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

``உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் உதடுகளால் நீர்த்தரத்தைப் பற்றிக் கொள்ள முடியாது. இதனால்தான், உதடுகள் வறட்சியோடு சேர்த்து வெடிப்படையவும் செய்கின்றது. எனவே உதட்டுக்கு எண்ணெய் பசை தன்மையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

உதடு

தேங்காய் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் ஐந்து சொட்டு அளவுக்கு ஆலிவ் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். பின்னர், அதை லேசாகச் சூடுபடுத்தி காட்டன் துணியில் நனைத்து அதை உதட்டில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, காட்டன் துணியால் அதிகப்படியாக இருக்கக்கூடிய எண்ணெய் பசையைத் துடைத்துக்கொள்ள வேண்டும். இதை வாரத்துக்கு இரு முறை செய்தால் உதடுகள் வெடிக்காமல் இருக்கும்.

சிலருக்குக் குளிர்காலத்தில் உதடுகள் நிறம் மாற ஆரம்பிக்கும். அவர்களுக்கான டிப்ஸ்...

கிரீன் டீ தற்போது பெரும்பாலானோர்களின் வீட்டிலும் பயன்படுத்துகிறார்கள். அந்த கிரீன் டீ பேக்கை எடுத்து சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், மெதுவாக அந்த டீ பேக்கால் உதட்டை தேய்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நிமிஷங்கள் வரை தேய்த்துக்கொள்ள வேண்டும். பின்னர், உலர்ந்த காட்டன் துணியால் உதடுகளைத் துடைக்கும்போது இயல்பான பிங்க் கலரில் உதடுகள் மாறிவிடும்.

பிங்க் நிற ரோஸ் இதழ்களை ஒரு நாள் இரவு முழுவதும் தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதை உதட்டின் மேல் தடவிக் கொண்டு மெதுவாக மசாஜ் போன்று செய்ய வேண்டும். அந்தக் கலவை வாயினுள் போனாலும் எந்தப் பிரச்னையும் கிடையாது. அதனால், இரண்டு அல்லது மூன்று முறை மசாஜ் செய்ய வேண்டும். முதலில் கொஞ்சம், அடுத்து கொஞ்சம் என மேலே மேலே அந்தக் கலவைகளை தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உதடுகளைக் கழுவி விட்டுப் பார்க்கும் போது உதடுகள் மிகவும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.

கடைகளில் பாதாம் எண்ணெய் கிடைக்கும். அதில் ஸ்வீட் பாதாம் எண்ணெய்யை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய்யை ஒரு துளி அல்லது இரண்டு துளி இட்டு இரவு தூங்குவதற்கு முன்னர் உதடுகளில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். காலையில் பார்க்கும் பொழுது உதடுகள் ரொம்ப அழகாக இருக்கும்.

உதடு

ஓட்ஸை தண்ணீரில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரையில் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், இரண்டு டீஸ்பூன் ஓட்ஸை நான்கு டீஸ்பூன் தண்ணீரில் கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். கொதி ஆறிய பின்னர் அதோடு சிறிதளவு தேனைச் சேர்த்துக் கொள்ளவும். இதைப் படுத்துக்கொண்டு உதட்டில் பேக் போன்று அப்ளை செய்ய வேண்டும். பின்னர் அதைத் துடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், இறந்த செல்கள் எல்லாமே போய்விடும். உதடுகள் கீழ்நோக்கி இல்லாமல் மேல்நோக்கிப் பார்ப்பதற்கு யங் லுக் கொடுக்கும்.

ஆர்கான் முல்தானிமெட்டி ஒரு டீஸ்பூன், பாலேடு ஒரு டீஸ்பூன் சேர்த்து உதட்டில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். இந்தக் கலவை வாயிற்குள் போய் விடக் கூடாது என்பதால் பேசாமல் இருக்க வேண்டும். ஒரு 15 நிமிடங்களுக்குப் பின்னர் அந்தக் கலவையைத்  துடைத்துக்கொள்ள வேண்டும். இது உதட்டிலுள்ள டெத் ஸ்கின் ரிமூவலுக்கு உதவியாக இருக்கும். 

அடுத்து, கற்றாழையை வெட்டி அதனுள் இருக்கின்ற ஜெல்லியை இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில், காய்ச்சாத பால் இரண்டு டீஸ்பூன் சேர்த்து அடிக்கடி பிரஷினைக் கொண்டு உதட்டில் அப்ளை செய்து கொண்டே இருங்கள்! சிறிது நேரத்துக்குப் பின்னர் கழுவி விட வேண்டும். லிப் சுருங்காமல் இருப்பதற்கு இது உதவும்.

உதடு

தேங்காய்ப் பால் எடுத்து அதை ஒரு காட்டன் துணியில் நனைத்து இரண்டு அல்லது மூன்று முறை உதட்டில் அப்ளை செய்துகொள்ள வேண்டும். அரை மணி நேரத்துக்குப் பின்னர் அதை துடைத்துக் கொள்ளவும். இது லிப் ஃபில்லர் (Lip Filler) மாதிரி பயன்படும்.

கடைகளில் பெட்ரோலியம் ஜெல்லி (petroleum jelly) கிடைக்கும். அதை உதட்டில் அப்ளை செய்ய உதட்டின் ஈரப்பதத்தை அது தக்க வைத்துக் கொள்ளும். 

ஒருசிலர், உதட்டிலுள்ள தோலைக் கடிப்பார்கள். அப்படியெல்லாம் செய்யாமல் இந்த டிப்ஸ்களில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் இயற்கையாகவே அழகான உதடுகளைப் பெற முடியும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்