முதிர்ச்சி நோய்களைத் தடுக்கப் புதிய வழி! - ஆய்வில் தகவல் | Research reveals keys to quality of life in old age

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (18/01/2019)

கடைசி தொடர்பு:17:31 (18/01/2019)

முதிர்ச்சி நோய்களைத் தடுக்கப் புதிய வழி! - ஆய்வில் தகவல்

முதிர்ச்சி நோய்களைத் தடுக்கப் புதிய வழி! - ஆய்வில் தகவல்

முதிர்ச்சியடைந்த பின்பும் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம் என்று லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

முதிர்ச்சி

சமீபத்தில் இவர்கள் நடத்திய ஆய்வின் முடிவில், இளம் வயதினரின் ரத்தத்தை வயதானவர்களுக்குச் செலுத்துவதால், முதிர்ச்சியால் வரக் கூடிய புற்றுநோய், டிமென்ஷியா மற்றும் இதய நோய்கள் தடுக்கப்படுகிறது என்று தெரியவந்துள்ளது. ஆய்வின் முதற்கட்டமாக இளம் வயது எலிகளின் ரத்தத்தை வயதான எலிகளின் உடலில் செலுத்தினர். இதன் முடிவில் வயதான எலிகளுக்கு முதிர்ச்சியால் வரக் கூடிய நோய்கள் எதுவும் வரவில்லை என்று `நேச்சர்' அறிவியல் இதழில் ஆய்வு குறித்து வெளியான கட்டுரையில் தகவல் வெளியாகி உள்ளது. 

எலிகளைக் கொண்டு செய்யும் இந்தச் சோதனை 150 வருடப் பழைமையான முறையிலிருந்து எடுக்கப்பட்டது. இரு எலிகளின் ரத்த ஓட்டத்தை மருத்துவ ரீதியில் ஒன்று சேர்த்தால் உறுப்புகள், தசைகள் மற்றும் செல்கள் புதுப்பிக்கப்படும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

முதிர்ச்சி

மேலும், ரத்தத்தில் இருக்கக் கூடிய ஆரோக்கியம் தரும் மூலக்கூறுகளைக் கண்டறிய ரத்தத்தைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். இதற்காக லண்டன் விஞ்ஞானிகள் விலங்குகளை வைத்து மேலும் சில சோதனைகளைச் செய்ய உள்ளனர். சான் ஃபிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த `ஆம்ப்ரோசியா' என்னும் நிறுவனம் ஒன்று மனிதர்களை வைத்து ஆய்வு செய்து வருகிறது.

இந்த நிறுவனம் இளம் வயதினரின் ரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட இரண்டரை லிட்டர் பிளாஸ்மா செல்களை 8000 டாலர்களுக்கு வழங்குகிறது இந்நிலையில் அதை வயதானவர்களின் உடலில் செலுத்தியதன் மூலம் கொழுப்பு குறைதல் போன்ற முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.