`ஆயுஷ்மான் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1400-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை!’ - நிர்மலா சீதாராமன் | Defence Minister Nirmala Sitharaman visit govt child hospital

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (23/01/2019)

கடைசி தொடர்பு:20:50 (23/01/2019)

`ஆயுஷ்மான் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1400-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை!’ - நிர்மலா சீதாராமன்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டைத் தொடங்கிவைத்தார். இம்மாநாட்டில்,  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்ட தொழில் பொருட்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து விண்வெளி, ராணுவத் தளவாட தொழிற்சாலைகள் மற்றும் ஆட்டோமொபைல் துறை, வேலைவாய்ப்பு தொடர்பாக  முதலீட்டாளர்கள் பங்குபெற்ற கருத்தரங்குகள் நடந்தன.

அரசு மருத்துவமனை - காப்பீடு

இந்த  மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்றார்.  அங்கு, பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம், முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம்குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நிர்மலா சீதாராமன்

பின்னர் அவர், "பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் அனைத்து சிகிச்சைகளையும் பெறலாம்.  ஏழைகளுக்கும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். 1400-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க  தொடங்கப்பட்ட திட்டமாகும். பிரதமர் உத்தரவின்படி இந்தத்  திட்டத்தில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்பது குறித்தும், அவர்களைப் பற்றி அறியவும் திருச்சியிலும்,  சென்னையிலும் பார்வையிட்டுள்ளேன் என்றார்.