குழந்தைகளுக்குப் பதில் செல்லப்பிராணிகள்! - தலைதூக்கும் புதிய கலாசாரம் | These couple interested in having pets instead of children

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (25/01/2019)

கடைசி தொடர்பு:19:45 (25/01/2019)

குழந்தைகளுக்குப் பதில் செல்லப்பிராணிகள்! - தலைதூக்கும் புதிய கலாசாரம்

ம்பதியாக இணையும் ஆண், பெண்ணின் வாழ்க்கைக்கு முழு அர்த்தம் கற்பிப்பவர்கள் குழந்தைகள்தாம். குழந்தை செல்வம் என்பது பெரும்பேறு. குழந்தைப் பேறு வேண்டும் என்பதற்காக சொத்து முழுவதையும் செலவழித்தவர்களையும், கடன் வாங்கிகூட மருத்துவம் பார்க்கும் தம்பதிகளும் நமது மண்ணில் ஏராளம். 

pets

ஆனால், குழந்தை பெற்றுக்கொண்டால் செலவு அதிகமாகிறது, அவர்களால் அதிக மனஅழுத்தம் ஏற்படுவதாகவும் கருதி குழந்தைகளுக்குப் பதில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் கலாசாரம் தற்போது தென்கொரியாவில் வேகமாகப் பரவி வருகிறது.

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்கள், திருமணமே செய்துகொள்ளாதவர்கள் என அந்த நாட்டில் பல இளைஞர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் செல்லப்பிராணிகளுக்கான பிரத்யேக உடைகள், விளையாட்டுப் பொருள்கள், உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், நிறுவனங்களின் வர்த்தகம் அதிகரித்துள்ளது.

இதைவிட வினோதமாகச் செல்லப்பிராணிகள் உயிரிழந்துவிட்டால் அவற்றுக்கென்று இறுதிச்சடங்கு நடத்தி, அவற்றின் சாம்பலைப் பாதுகாக்கும் பழக்கமும் அங்கு உள்ளது. இதனால் செல்லப்பிராணிகளுக்கு இறுதிச்சடங்குகள் நடத்துவதைப் பலர் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

செல்லப்பிராணிகள்

இதனால், செல்லப்பிராணிகள் வர்த்தகம் தென்கொரியாவில் பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் செல்லப்பிராணிகள் தொடர்பான வர்த்தகம் ரூ.1,70,868 கோடி. 2027-ம் ஆண்டில் இந்த வர்த்தகம் இரட்டிப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எதிர்கால மனிவளத்துக்குத் தேவையான குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் தற்போது தென்கொரியாவில்தான் உள்ளது.