வடமாநிலங்களை மிரட்டும் பன்றிக் காய்ச்சல் - 24 நாள்களில் 20 பேர் உயிரிழப்பு! | swine flu claims 20 lives in punjab

வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (25/01/2019)

கடைசி தொடர்பு:21:25 (25/01/2019)

வடமாநிலங்களை மிரட்டும் பன்றிக் காய்ச்சல் - 24 நாள்களில் 20 பேர் உயிரிழப்பு!

ன்றிக் காய்ச்சல் பரவி வருவதால் பஞ்சாப்பில் மட்டும்  20 பேர் வரை பலியாகியுள்ளனர். கடந்த வருடம் நாடு முழுதும் பரவிய ஹெச்1 என் 1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதனால் மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிரடியாகத் தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டது. இதன் விளைவாகப் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அந்தக் காய்ச்சல் பரவி வருகிறது.

பன்றிக் காய்ச்சல்

குறிப்பாக, வடமாநிலங்களில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த இரு வாரங்களில் பஞ்சாப் மாநிலம் மால்வா மாவட்டத்தில்  மட்டும் 20 பேர் வரை பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 

அம்மாநிலத்தில் உள்ள லூதியானா, குருதாஸ்பூர், பாட்டியாலா ஆகிய பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பகுதிகளுக்கு சிறப்பு மருத்துவக் குழுக்களை பஞ்சாப் மாநிலச் சுகாதாரத்துறை அனுப்பி வைத்துள்ளது. திடீரென இந்தக் காய்ச்சல் பரவக் காரணம் தற்போதைய காலநிலை மாற்றம்தான் காரணம் எனக் கூறப்படுகிறது.  

பன்றிக்காய்ச்சல்

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரஹம் மொஹிந்திரா கூறுகையில், "காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சலைத் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.