``ஓடாத மாநிலங்கள்தான் இலக்கு’’ - 100 வது மாரத்தானில் அசத்திய தி.மு.க எம்.எல்.ஏ | Dmk MLA M.subramaniam Completed 100 Marathon

வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (29/01/2019)

கடைசி தொடர்பு:19:36 (29/01/2019)

``ஓடாத மாநிலங்கள்தான் இலக்கு’’ - 100 வது மாரத்தானில் அசத்திய தி.மு.க எம்.எல்.ஏ

``2019-ம் ஆண்டுக்குள் நூறு மாரத்தானில் ஓடி முடித்துவிடுவேன்’’ என விகடனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சொல்லியபடியே, ஓடி முடித்திருக்கிறார் சென்னையின் முன்னாள் மேயர், சைதாப்பேட்டை தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன். சர்க்கரை நோயிலும், கோர விபத்தொன்றிலும் சிக்கி இனி நடக்கவே முடியாது என மருத்துவர்களால் கைவிடப்பட்டவர். தன் அபார முயற்சியாலும் தொடர்ச்சியான ஓட்டத்தாலும் இந்தச் சாதனையை எட்டிப்பிடித்திருக்கிறார். 

மா.சுப்பிரமணியன்

சமீபத்தில், சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் இந்தச் சாதனையைத் தொட்டிருக்கிறார் அவர். இதுவரை லண்டன், கத்தார், இத்தாலி, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, நார்வே போன்ற பத்துக்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும், இந்தியாவின் 18 மாநிலங்களிலும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு ஓடியிருக்கிறார்.

மா.சுப்பிரமணியன்

100 வது போட்டியில் ஓடி முடித்த மகிழ்வில் இருந்தவரிடம் பேசினோம்,

``என்னுடைய அடுத்த இலக்காக, இந்தியாவில் நான் இன்னும் ஓடாத மாநிலங்களில் இனி ஓட வேண்டும். நான் எழுதிக்கொண்டிருக்கும் வாங்க ஓடலாம் (Lets run) புத்தகத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியிட இருக்கிறேன். என்னுடைய இந்த முயற்சிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, தளபதி ஸ்டாலின் கூப்பிட்டுப் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’’  என்றார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க