குளிர்பானங்களில் கலக்கப்படும் உலோகங்கள்!- பெற்றோரை எச்சரிக்கும் புதிய ஆய்வு | Heavy metals found in Cool drinks, reveals new study

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (02/02/2019)

கடைசி தொடர்பு:17:55 (02/02/2019)

குளிர்பானங்களில் கலக்கப்படும் உலோகங்கள்!- பெற்றோரை எச்சரிக்கும் புதிய ஆய்வு

க்கள் விரும்பிக்குடிக்கும் குளிர்பானங்களில் உலோகம் கலந்திருக்கிறதா என்று அமெரிக்காவில் அண்மையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிர்ச்சி தரும் பல முடிவுகள் வெளியாகியுள்ளன. நுகர்வோருக்காகச் செயல்படும் அமெரிக்காவின் செய்தி நிறுவனம் `கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ்' என்ற நிறுவனம் ஆப்பிள் மற்றும் திராட்சை உள்ளிட்ட பழச்சாறுகளில் உலோகம் கலந்திருக்கிறதா என்ற ஆராய்ச்சியில் இறங்கியது. 24 நிறுவனங்களைச் சேர்ந்த 45 வகை குளிர்பானங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 

குளிர்பானங்களில் உலோகம்

ஆப்பிள், திராட்சை, பேரிக்காய் போன்றவற்றின் பழச்சாறுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மொத்தம் 45 வகை பானங்களை ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தனர். அந்த 45 வகை குளிர்பானத்திலும், ஒவ்வொன்றிலும் தலா மூன்று குளிர்பான பாட்டில்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில் அனைத்து குளிர்பானங்களிலும் மனித உடல்நலனைப் பாதிக்கும் உலோகங்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஈயம், பாதரசம், கனிம ஆர்சனிக், காட்மியம் (cadmium) போன்ற உலோகங்களில் ஏதோவொன்றாவது இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

குளிர்பானம்

`இந்தக் குளிர்பானங்களில் கண்டறியப்பட்ட உலோகங்கள் யாவும் பெரியவர்களைவிடவும் குழந்தைகளுக்கு மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் குழந்தைகள் குளிர்பானங்களை குடிக்கும் விஷயத்தில் பெற்றோர் இருக்கவேண்டும்' என்று ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர். ஆய்வாளர்களில் ஒருவரான ஜெனிஃபர் இந்த ஆய்வு குறித்து பேசும்போது, ``சிறு வயதில் இவ்வளவு வீரியமான உலோகங்களை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு வருங்காலத்தில் நுண்ணறிவுத்திறன் (IQ level) குறைவது தொடங்கி, டைப் 2 சர்க்கரைநோய், பிஹேவியர் குறைபாடு, புற்றுநோய் போன்றவைகூட ஏற்படலாம்" என எச்சரித்துள்ளார். 

`அதிக குளிர்பானங்கள் குடிக்கும் பெரியவர்களுக்கும் சிறுநீரகம், நுரையீரல் அல்லது தோல் புற்றுநோய் ஏற்படக்கூடும் என்றும், கூடுதலாக அறிவாற்றல் குறைபாடுகள், சர்க்கரைநோய், மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளன' எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க