விபத்துகளைக் குறைக்கும் முதல் 3 மாவட்டங்களுக்கு விருது! - தமிழக அரசு அறிவிப்பு | TN government announces award for districts for steps to taken over road accident

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (04/02/2019)

கடைசி தொடர்பு:19:25 (04/02/2019)

விபத்துகளைக் குறைக்கும் முதல் 3 மாவட்டங்களுக்கு விருது! - தமிழக அரசு அறிவிப்பு

வ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேபோகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னலை மீறிச் செல்லுதல், வாகனங்களில் அதிக சரக்குகளை ஏற்றுதல், செல்போனில் பேசிக்கொண்டு  வாகனம் ஓட்டுதல் எனப் பலர்,  சாலை விதிகளை முறையாகப் பின்பற்றாமல்  செயல்படுவதே வாகன விபத்துகள் அதிகரிக்க முக்கியக் காரணம். 

விருது

தமிழகத்தில், கடந்த ஆண்டில் மட்டும்  63,920 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 12,216 பேர் உயிரிழந்துள்ளனர் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தடுக்கும் விதமாக, ஒவ்வோர்  ஆண்டும்  தமிழக அரசு சார்பில் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்த ஆண்டு, இன்று தொடங்கி (04.01.2019) 10-ம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.  இந்த ஒரு வாரமும் ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தல், ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துவது, பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்குப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் அளித்தல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

 விருது

இதுதவிர,  விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்க சிறப்பான நடவடிக்கை எடுக்கும் முதல் மூன்று மாவட்டங்களுக்கும், ஒரு சிறந்த காவல் துறை ஆணையகரத்துக்கும்  முதல்வர் பெயரில் விருது வழங்கப்படும்'' எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.