மருத்துவ ஆய்வகங்களில் பணியாற்றுபவர்களுக்கான சர்வதேச கருத்தரங்கம்! | International conference for Medical laboratory technicians

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (07/02/2019)

கடைசி தொடர்பு:21:13 (07/02/2019)

மருத்துவ ஆய்வகங்களில் பணியாற்றுபவர்களுக்கான சர்வதேச கருத்தரங்கம்!

ருத்துவ ஆய்வகங்களில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கான சர்வதேசக் கருத்தரங்கம் சென்னைப் போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 9) தொடங்குகிறது. சர்வதேச மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் மருத்துவத் தர நிர்வாகிகள் அமைப்பின் தமிழகக் கிளையின் (ஐக்யூஎம்ஏ - டிஎன்) சார்பில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கை சர்வதேச மற்றும் தேசிய அளவிலான நிறுவனங்கள் இணைந்து நடத்த  உள்ளன.

கருத்தரங்கம்

கருத்தரங்கம் தொடர்பாக ஐக்யூஎம்ஏவின் தலைவரும் மேத்தா மருத்துவமனையின் தலைமைச் செயல் இயக்குநர் மற்றும் துணைத் தலைவருமான சமீர் மேத்தா கூறும்போது, ``மருத்துவ ஆய்வகங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ஆய்வகங்களின் முதுகெலும்பாக அங்குப் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள்தான் பணியாற்றி வருகின்றனர்.

இதுபோன்ற மருத்துவக் கருத்தரங்கங்களில் பங்கேற்கும் வாய்ப்பு மூத்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கே கிடைத்துவந்தது. அந்த நிலையை மாற்றி அனைத்து மட்டத்திலும் பணியாற்றும் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்களும் துறை சார்ந்து தங்கள் அறிவைப் பெருக்கிக்கொள்வதற்காக இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ஆய்வகத் துறையின் நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கு சிறந்த தளமாக இந்தக் கருத்தரங்கம் அமையும்" என்றார்.

ஆய்வகம்

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் ஐஐடியின் பேராசியர் பி.ரவீந்திரன், பிரபல மருந்து நிறுவனம் ரான்பாக்ஸியைச் சேர்ந்த டாக்டர் பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரை வழங்க உள்ளனர்.