மார்ச் 31-க்குள் அனைத்து மருத்துவ நிறுவனங்களுக்கும் பதிவு அவசியம்! | a story about registration for medical companies is essential!

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (07/02/2019)

கடைசி தொடர்பு:22:00 (07/02/2019)

மார்ச் 31-க்குள் அனைத்து மருத்துவ நிறுவனங்களுக்கும் பதிவு அவசியம்!

ருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்தச் சட்டத்தின் கீழ் அனைத்து மருத்துவ நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ பதிவு

தமிழ்நாடு மருத்துவமனை நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம் 1997 மற்றும் அதைச் சார்ந்த விதிகள் 2018-ன்  கீழ் பதிவு செய்யப்பட்ட மருத்துவ நிறுவனங்களுக்குப் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கி, அதைப் பெற கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்தும் கட்டண நுழைவு வாயில் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது,

``தமிழகத்தில் செயல்படும் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தவும், அவை பற்றிய விவரங்கள், அங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் போன்றவற்றை நிர்ணயிக்கும் விதமாக தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தவும் 1997-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், விதிகள் வகுக்கப்படாததால் இந்தச் சட்டம் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது. பிறகு, 2019-ம் ஆண்டில் மருத்துவ நிறுவனங்கள் பதிவு செய்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தச் சட்டங்களை வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்தனர். 

அமைச்சர் விஜயபாஸ்கர்

அதன்படி, 2018-ம் ஆண்டில் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் இந்தச் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும், அது 2018 ஜூன் 1 ம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. இதுகுறித்த அறிவிப்பானது தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இச்சட்டத்தின்படி அனைத்து மருத்துவ நிறுவனங்களும் பதிவு செய்திடல் வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்நிறுவனங்கள் மார்ச் 31ம் தேதிக்குள் அரசிடம் பதிவு பெறுதல் அவசியமாக்கப்பட்டுள்ளது. 

அலோபதி, ஆயுஷ், பல் மருத்துவம், ஆய்வுக்கூடங்கள், நுண்கதிர் பிரிவு உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளும் பதியப்பட்டு பதிவுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். பதிவுகோரும் மருத்துவ நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக ரூ.5,000 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்” என்றார்.